கிடைத்த உணவைக் குறை கூறும் முன்பு, பல்லாயிரம் மக்கள் உணவில்லாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்.
உனது துணையைக் குறை கூறும் முன்பு ஒரு நல்ல துணையைத் தேடி எத்தனை இலட்சம் மக்கள் தவம் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்.
வாழ்க்கையைக் குறைகூறும் முன்பு எத்தனை பேர் வாழாமலே செத்துப் போய்விடுகிறார்கள் என்று எண்ணிப்பார்.
குழந்தைகளைக் குறைகூறும் முன்பு மழலைச் செல்வங்களுக்காக எத்தனை பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்.
வீட்டைச் சுத்தம் செய்யவில்லையென பிறரைக் குறைகூறும் முன்பு வீடே இல்லாமல் எத்தனைபேர் தெருவில் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்.
உன்னுடைய வேலை கடினம் என்று குறைகூறும் முன்பு வேலையில்லாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்.
குறைகூறுதல் என்ற எதிர்மறையான எண்ணம் உன்னைப் பிறர் வெறுத்து, அண்டவிடாமல் விலகிச் செல்ல வைத்துவிடும்.
மரணமில்லாப் பெருவாழ்வு வாழ
இறப்பில்லாத வாழ்வு வாழ்!!!
நன்றியுள்ளவர்களின்
இதயத்தில் வசிப்பதே.
No comments:
Post a Comment