இன்று 25.9.2014 வியாழக்கிழமை குரு வாரத்தில் தெய்வ அருளுடன், மகான்களின் ஆசிகளுடன் காலை 8.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஸி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஸ்ரீ ஜெயதுர்கா ஹோமம், பகுளாமுகி ஹோமம், காலபைரவர் ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. சகல திருஷ்டிகளும், தோஷங்களும், சத்ரு உபாதைகளும் நீங்க நூற்றுக்குமேற்பட்ட மூலிகைகள், பலவகையான பழங்கள், எண்ணற்ற புஷ்பங்கள், இனிப்பு வகைகள், கார வகைகள், சித்ரா அன்னங்கள் மற்றும் நவ சமித்துக்களுடன் நெய், தேன், நெல்பொறி, பூசணிக்காய். கடுகு, உப்பு, மிளகாய் வற்றல் கொண்டு விசேஷ யாகம் நடைபெற்றது. இதில் பூர்ணாஹூதியின் போது தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்யமாக வாழவும், தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டியும் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்று, பட்டு வஸ்திரங்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. இந்த யாகத்தில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பங்கேற்று நடத்தினர்.
இதில் ஏராளமான கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment