மகாகால பைரவர் ஹோமம்
Monday, 22 September, 2014 04:32 PM
வேலூர், செப். 22: வேலூரில் தன்வந்திரி பீடத்தில் இன்று 21.09.2014 ஞாயிறு
கிழமை காலை10மணியளவில் சொர்ண ஆகஷ்ண பைரவருக்கு சொர்ணகாசு சொர்ண புஷ்பம், கொண்டு சொர்ண லட்சார்ச்சனை நடைப்பெற்றது.
மேலும் சொர்ண பைரவர் ஹோமம், அஷ்டபைரவர் ஹோமம், 64 பைரவர் ஹோமத்துடன், மகா கால பைரவர் ஹோமம் நடைப்பெற்றது. இதில் 20 மேற்பட்ட வகைகளான புஷ்பங்களை கொண்டு, 20 மேற்பட்ட சிவாச்சார்யார்கள் கலந்து கொண்டு இந்த யாகத்தை நடத்தினர்
இதில் பலவகையான இனிப்பு பட்சனங்கள், கார பட்சனங்கள், பழங்கள்,செவ்வரளிப்பூ கொண்டு வழிபாடு செய்யப்பட்டது.
நிறைவில் 74 கலச தீர்த்தங்களை ஆகஷ்ண பைரவருக்கு அஷ்டமங்கல கால பைரவருக்கு மகா அபிஷேக நடைப்பெற்று மேலும் வடமாலை, தயிர்சாதம் பால், தேன், உளுந்து சாதம், வெல்லம்கலந்த பாயசம் ஆகியவைகளை கொண்டு சொர்ண பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூஷ்மாண்ட தீபம் ஏற்றப்பட்டு வழிபட்டனர். மேலும் இதை தொடர்ந்து பிரதோஷ நாளை முன்னிட்டு 468 சித்தர்களுக்கும் சிவனுக்கும் மரகத ஈஸ்வரிக்கும் மாலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.அன்னதானுமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதற்கான உதவிகளை சென்னையை சேர்ந்த டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சதிஷ் டாக்டர் விஷ்வஜா ஆந்திர மாநிலம் புத்தூர் தொழில் அதிபர் திரு உமாசேகர் குடும்பத்தினர் என டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment