உலக அமைதி, மழை வேண்டி யாகம்
உலக அமைதி மற்றும் மழை பெய்ய வேண்டி ஈரோட்டில் யாகபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.வேலூர், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் சார்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தன்வந்திரி, சுதர்சன ஆழ்வார், ஆரோக்கிய லட்சுமி ஆகிய 3 உற்சவ மூர்த்திகளுக்கு யாக பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவர் முரளிதர சுவாமிகள் தலைமையிலான யாக பூஜை, ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதையொட்டி, கேஎம்சிஎச் சாலையில் வியாழக்கிழமை யாகபூஜை நடைபெற்றது.
உலக அமைதி பெறவும், மழை பெய்து வறட்சி நீங்கவும், தேசிய நதிநீர் இணைப்புக்காகவும், நீண்ட ஆரோக்கியம் வேண்டியும் வேத விற்பன்னர்கள் யாக பூஜையில் ஈடுபட்டனர்.
வேத விற்பன்னர்கள், மந்திரங்களை முழங்க நெய், நவதானியங்கள், பழங்கள், பட்டுத்துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஹோம குண்டத்தில் இட்டு பூஜை நடத்தினர்.
தொடர்ந்து, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், சரஸ்வதி மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜைகளும் நடத்தப்பட்டன.
No comments:
Post a Comment