வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதூர்த்தி விழா வரும் 29ம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறுங்கும் இல்லாத வகையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரி வடிவமைக்கப்பட்டு அவ்வப்போது கணபதிக்குரிய கணபதி ஹோமம்,வாஞ்சாகல்பதா கணபதி ஹோமம் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. மேலும் ஸ்வாமிகளின் அறிவுரையின் பேரில் தைலாபிஷேகம் நடந்து வருகிறது.
வருகிற 29ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதிஹோமம், நடைபெற உள்ளது.
பின்னர் ஓரே கல்லில்லான விநாயகர் தன்வந்தரிக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 23 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்துடன் அர்ச்சிக்கப்பட உள்ளது. அந்த இலைக்களின் பெயர்கள் முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும்.
இந்த தகவலை யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment