வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் 4.5 அடி உயரத்தில் அகண்ட பாரதத்துடன்
பாரதமாதாவிற்கு சந்நதி அமைத்து வழிபாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் 68வது சுதந்திர
தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ பாரத மாதா ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன்
லோக ஷேம ப்ரார்த்தனை நடைபெற்றது. மேலும் ராயர் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகமும்
நடைபெற்றது.
இதனைத்
தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் சுதந்திர கொடியேற்றத்துடன், இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் 51 சக்தி பீட யாகத்தில் 51 பக்தர்கள் பங்கேற்று 2ம் நாள் யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞடர் திரு.கண்ணன், வடநாட்டைச் சேர்ந்த ஸ்வாமிகளும்,
பெருமாள் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திரு.விநாயகம் அவர்கள் கரங்களால் 500க்கும் மேற்பட்ட
பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment