Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 27, 2014

வாஸ்து சாந்தியும், வாஸ்து ஹோமமும்


ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  இன்று (27.07.2014) வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தியும், வாஸ்து ஹோமமும்  நடைப்பெற்றது.

வாஸ்து விழிக்கும் நாளில் மக்கள் அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.

பல லட்சங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற வீண்விரயங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே புராணத்தில் சொல்லியுள்ள படி, வாலாஜாப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வாஸ்துபகவானை தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் உள்ளபடியே அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

வாஸ்து முறையான கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் உருவாகும்.
மேலும் புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள் மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம்,  வாஸ்து நாளான 27.7.2014 அன்று காலை 10.00 மணியளவில் வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைப்பெற்றது. என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment