ஆகஸ்ட் 14-ல் வாலஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 51 சக்தி பீட யாகங்கள்
By dn, நீடாமங்கலம்
First Published : 09 July 2014 06:29 AM IST
உலக மக்களின் நலன் வேண்டி வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டை, கீழ்ப் புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 51 சக்தி பீட யாகங்கள் நடைபெறவுள்ளதாக ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.
வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவர், சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
உலகம் முழுவதும் ஆயிரமாயிரம் கோயில்கள் உண்டு என்றாலும், 51 கோயில்கள் மட்டும் அட்சர சக்தியின் 51 பீடங்கள் என்று அடையாளம் கண்டு போற்றி வருகிறோம். இந்த 51 சக்தி பீடத்திருக்கோயில்களும் வெவ்வேறு இடங்களில் தரிசிக்க கிடைக்கின்றன என்றாலும், அவை அனைத்தையும் ஒருவர் சென்று தரிசிப்பது என்பது சிரமம்.
இந்த புனித பீடங்கள் இந்தியாவில் மட்டுமில்லாமல், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், திபெத் போன்ற நாடுகளிலும் அமைந்துள்ளன. இத்தகைய புனிதமான பீடங்களை தமிழகத்தில் ஒரே இடத்தில் தரிசித்து இறைவனின் அருளை அனைவரும் பெறும்விதத்தில், ஒரு மாபெரும் யாகம் ஆகஸ்ட் 14-ம் தேதி 17-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை பல்வேறு யாகங்கள் இந்த தன்வந்திரி பீடத்தில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ஆரோக்கிய விழிப்புணர்வு மகாயாகம் (தன்வந்திரி யாகம்) நடத்தப்பட்டு வருகிறது. தன்வந்திரி பீட யாகத்தில் பங்கு பெற விரும்புபவர்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், கீழ்ப்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலஜாபேட்டை, வேலூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 04172-230033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:
Post a Comment