Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 22, 2014

தன்வந்திரி பீடத்தில் விரைவில் ப்ரிதிஷ்டை செய்யப்படவுள்ள ஐந்து அடி உயரமுள்ள தசபுஜ காளி.


வேலுார் மாவட்டம் வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம்தேதி முதல் 17ம் தேதி வரை உலகில் முதல் முறையாக  51சக்தி பீடதேவிகளுக்கும் 51 ஹோம குண்டங்களில் முதல் இரண்டு நாட்கள்  பெண்களும் அடுத்த இரண்டு நாட்கள்  51 சிவாச்சாரியார்களை கொண்டு மஹா மாத்ருகா ஹோமங்கள் நடைப்பெற உள்ளது.

அதன் பூர்வாங்க பூஜையாக வரும் 24ம் தேதி மற்றும் 25ம் தேதி வரை காலை 10 மணி அளவில் தசமகா யாகம் நடைப்பெற உள்ளது. பீடத்தில் அதன் படி குண்டமானது சக்தி (சூலம்) வடிவில் அமைத்து, சூலத்திற்குள் 51 ஹோம குண்டங்கள் மற்றும் பத்து கைகளுடன் மகா காளி சிலை சுதை வடிவில் அமைத்து பிரதிஷ்டை நடைப்பெற உள்ளது.
தசமகா யாகமானது, பாலாதிரிபுரசுந்தரி, தூமாதேவி, பகளாமூகி, திரிபுரபைரவி, சின்ன மஸ்தா, தாராதேவி, கமலாத்மிகா ,மகா காளி, மாதங்கி, புவனேஸ்வரி அந்த பத்து ரூப தேவி களுக்காக நடைப்பெற உள்ளது.

தக்ஷ்யனின் மகளாகப் பிறந்த பார்வதி அந்த ஜென்மத்திலும் சிவ பெருமானை மணந்து கொண்டாள். ஆனால் பின்னர் சிவபெருமானுடன் தக்ஷ்யனுக்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் மாமனார் செய்த எந்த பூஜைகளிலும் , யாகங்களிலும் சிவ பெருமான் பங்கேற்கவில்லை. ஆனால் தக்ஷ்யன் ஒரு முறை செய்த யாகத்தில் தானும் சென்று பங்கேற்க பார்வதி விரும்பினாள். கோபமுற்ற சிவபெருமான் அதற்கு முதலில்  சம்மதிக்கவில்லை. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆகவே அதில் கோபமடைந்த பார்வதி தனக்கும் அவரைப் போலவே சக்தி உள்ளது என்பதை எடுத்துக் காட்ட பத்து பயங்கரமான மற்றும் சாந்த வடிவங்களில் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்தி சிவனை சாந்தம் அடையச் செய்து அந்த யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றாளாம். அந்த சக்தி ரூபங்களின் குணங்களும் சக்திகளுமே தசா மஹாவித்யா எனும் - பத்து அபார ஞானம் - என ஆகியது .  நூற்றுக்கணக்கான  சக்தி உபாசனைகளில் அபாரமானதும், முக்கியதுமான அந்த பத்து சக்திகள் அடங்கிய மஹாவித்யா மூலமே சக்தி வழிபாடும் அதிகமாகியது.

அந்த பத்து ரூப தேவிகளை சரியான முறையில் வணங்கி மந்திர உச்சாடனம் சரியாகச் செய்து வந்தால் மந்திர தந்திர சித்திகள் ஒருவருக்கு கிடைக்கும். அது மட்டும் அல்ல அவர்களை வணங்கி வந்தால் வாழ்கையில் பல நன்மைகள் கிடைக்கும்.  ஒருவர்  தன்னையே  முழுமையாக  அடக்கி  ஆளலாம் தேவிகளுக்குரிய  ஆடி மாதத்தில் நடைப்பெறுவது சிறப்பு.

கருணை மிக்கவள். ஞானத்தைத் தருபவள். அவள் அனைத்து கிரகங்களுக்கும் தலைவரான  பிரஹஸ்பதியின் குருவாம்.
எதிரிகள் மீதான பயம் ஒழியும். வீட்டிலும் தீயவை வராது. அவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம். இதில் பங்கேற்ப்பவர்களுக்கு பிராத்தனை அனைத்தும் நிறைவேறும்
என்று  யக்ஸ்ரீ டாக்டர் ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  தெரிவித்தார்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
தன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513. வேலூர் மாவட்டம்.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04172-230033, 9443330203.

No comments:

Post a Comment