கலியுகத்தில்
நாமசங்கீர்த்தனம் ஒன்றே இறைவனின் திருப்பாதங்களை எளிதாக அடையும் வழி என்று கூறப்பட்டு
வருகிறது. அதிலும் புனித மார்கழி மாதத்தில் இறைவனின் நாமாக்களையும், சங்கீதங்களையும்
எவர் ஒருவர் துதி செய்கின்றார்களோ அல்லது அந்த துதியில் எவர் கலந்து கொள்கிறார்களோ
அவர்களுக்கு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது புராணம்.
சங்கீர்த்தனம்
வழியாக இறைவனை மகிழ்விப்பதால் இறைவன் நமக்கு எல்லையில்லா ஆனந்தத்தையும் உடல், மனம்,
ஆன்மா போன்றவைகளை ஒருநிலைப்படுத்தி அமைதியையும், சந்தோஷத்தையும் அளிப்பர். இந்த பாக்யத்தை
அனைவரும் பெறும் விதத்தில் இன்று (6.1.2014) தன்வந்திரி பீடத்தில் கர்நாடக மாநிலம்
மைசூரில் உள்ள ஸ்ரீ பட்டாபிராமன் பஜனை மண்டலியை சார்ந்த சுமார் 20 பேர் கொண்ட குழுவினர்
நாம சங்கீர்த்தனத்துடன் பக்தி பாமாலை இசைத்தனர்.
இதில்
கோவிந்தனைப் போற்றியும், ஸ்ரீ கிருஷ்ணனைப் போற்றியும், ஸ்ரீ ராமரைப் போற்றியும் பலவகையான
பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இக்குழுவினருக்கு சிறப்பு ஆராதனையுடன் சிறப்பு பிரசாதம்
வழங்கப்பட்டது. முடிவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்றனர்.
No comments:
Post a Comment