வாலாஜா, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நன்னாளில் பீடத்தில் அமைந்துள்ள பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காலச்சக்ரத்தின் நடுவில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் குடியரசுதினத்தை முன்னிட்டு சுவாமிகளின் திருக்கரங்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த
நன்னாளில் உலக நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில்
சிறப்பு ஹோமங்களான,
- சகல தோஷங்களும் நீங்க வேண்டி சகல தோஷ நிவாரண ஹோமம்
- சத்ருக்களின் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட வேண்டி சர்வ சத்ரு நிவாரண ஹோமம்.
- திருமணமாகத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி ஹோமம்.
- சகல ஐஸ்வர்யங்களும் பெற வேண்டி சகல தேவதா ஹோமம்.
இந்த
ஹோமங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட
பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு
கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment