கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்
144வது ஜெயந்தி விழா இன்று 22.01.2014 தை 9 ம் தேதி புதன் கிழமை காலை 10.00 மணிமுதல்
1.00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் விசேஷ ஹோமமும், மஹா அன்னதானமும், அபிஷேகமும், கூட்டுப்பிரார்த்தனையும்,
மஹா தீபாராதனையும், நவாவர்ண பூஜையும் நடைபெற்றது. மேலும் பக்தி சங்கீர்த்தனங்களும்
நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தன்வந்திரி பீடத்தில் மட்டுமே குழந்தையானந்த
சுவாமிகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இருவரையும் ஒரு சேர தரிசித்து மகிழ்ந்தனர்.
சேஷாத்ரி சுவாமிகளின்
அற்புதங்கள்…
இவர்
1870ம் ஆண்டு பிறந்தார். இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார்.இவரின் வரலாறை கேட்டால்
வித்தியாசமானது. இவர் தங்கக்கை சேஷாத்ரி
என்றும் அழைக்கப்பட்டார். இதற்க்கு காரணம் இவர் சிறுவயதாக
இருந்தபோது இவர் ஊரில் இருந்த
கண்ணன் கோவிலில் விழா நடந்தது. அந்தகோவில் விழாவிற்க்கு இவர் தன் தாயுடன்
சென்று இருந்தார் அந்தநேரமாக அந்தக்கோவிலில் ஒருவன் பொம்மை விற்று
கொண்டிருந்தான் .
சிறு
குழந்தையான சேஷாத்ரி பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்க தாய்
வேண்டாம் என்றார். இதை பார்த்த பொம்மை
விற்றவன் அம்மா சிறு குழந்தை
கேட்கிறது உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு பொம்மை நான் சும்மா தருகிறேன்
என்று சேஷாத்ரியிடம் ஒரு பொம்மையை கொடுத்தான்.
சிலமணிநேரங்களுக்கு
பிறகு சேஷாத்ரியை தேடி பொம்மை விற்பவன்
வந்தான் அம்மா இது சாதாரண
குழந்தை இல்லை ஞானக்குழந்தை என்றான்.
ஏனென்றால் சற்றுமுன் என்னிடம் நிறைய பொம்மைகள் இருந்தன
பலநாட்களாக அந்த பொம்மைகள் விற்கவில்லை இப்போது விற்று தீர்ந்துவிட்டது இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள்
எனக்கு ஒன்றும் புரியவில்லை இது
சாதாரண கை இல்லை தங்கக்கை என்று
பாராட்டினான் அதனாலேயே இந்தபெயர் வந்தது.
ஞானமார்க்கத்தை
தேடிய சேஷாத்ரி தனது இளமைப் பருவத்தில் திருவண்ணாமலை
வந்தார் அங்கேயே சுற்றி திரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில்
அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில்
சிலர் மீது மட்டும் [கடும்
தோஷம் உடைய] பக்தர்கள் மீது
தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார்
பலருக்கு பல்வேறு விதமான நோய்கள்
தீர்ந்து இருப்பதாக இதனால் நம்பப்படுகிறது. பலருக்கு
பல்வேறுவிதமான தோஷங்கள் விலகிஉள்ளது. இவர் திருவண்ணாமலையில் ஒரு
இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும்
அழைக்கப்பட்டார் அதற்க்குகாரணம் இவர் ஊரை சுற்றி
வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது.
திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார்
கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார்
கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி
இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும்
வியாபாரிகளும் இவர் பார்வை நம்
மீது படாதா என ஏங்குவர்.
ஆனால் சரியான நபருக்கு மட்டுமே
இவரின் கருணைப்பார்வை படும். ஒருமுறை ஒரு
சவஊர்வலம் சென்று கொண்டிருந்தது அதன் பின்னே சென்ற
இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள்
சென்றார்.
சவ
ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை
விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில்
வைத்து இருந்த ஒரு பெரிய
பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை
தட்டிவிட்டார். ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென
ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை
பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள்
ஒரு நாகம் இறந்து கிடந்தது
சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை
கையெடுத்து வணங்கினர் மக்கள் அனைவரும். இப்படி
இவரின் வரலாறு அதிகம். ஒரு
முறை ஊரில் அம்மை நோய்
அதிகம் இருந்தது யாரும் வெளியில் வரக்கூடாது
என்ற ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவை மீறி வெளியில்
வந்தார் இவரை 15 நாட்கள் ரிமாண்ட்
செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இரண்டு
நாட்களுக்கு பிறகு விழுப்புரம் செல்வதற்கு
நீதிபதி காரில் சென்று கொண்டிருந்தபோது
நீதிபதியின் கண்களுக்கு
சாலையோரத்தில் இவர் தெரிந்தார் அப்படியே
தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்ரி
உள்ளாரா எனப்பார்த்து வரச்செய்தார் அவர் அங்கு பத்திரமாக
உள்ளார் என உதவியாளர் வந்து
தகவல் சொன்னார். நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை அவர் ஒரு மகான்
என புரிந்துகொண்டார் தன் தவறை உணர்ந்து
அவரை விடுதலை செய்தார். இப்படி
பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமிகள் 1929ம் ஆண்டு மறைந்தார்
அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான்
ரமணர் உட்பட பலர் கலந்து
கொண்டனர். சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் திருவண்ணாமலை நகரில்
அமைந்துள்ளது.
No comments:
Post a Comment