மனித
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில்
‘மாதா, பிதா, குரு, தெய்வம்’
என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். இதில் நம்முடைய பெற்றோர்களுக்கு ஏற்றாற்போல்
நடந்து அவர்களின் ஆசியை எளிதில் பெற்று விடலாம். ஆனால் குருவின் ஆசி கிடைப்பது அவ்வளவு
எளிதல்ல.
நமது
பள்ளிப் பருவத்திலே கல்வி கற்றுத் தருகின்ற குருவின் ஆசி பெற வேண்டுமானால் படிப்பிலும்,
ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவேண்டும். விளையாட்டு, யோகா மற்றும் பல விதமான வாழ்வியல்
பாடங்களை கற்றுத்தருகின்ற குருவின் ஆசியை பெற வேண்டுமானால் நாம் தனித்திறமைகளில் சிறந்து
விளங்க வேண்டும்.
அதேபோல்
எத்தனையோ கல்வி கற்று உயர்ந்த நிலையில் இருந்தாலும் வாழ்வில் சிறந்த நெறிமுறைகளோடு
நடந்து கொள்ள வேண்டுமானால் அவரவர் மத குருமார்களின் வழிகாட்டுதல்களில் வந்தால் மட்டுமே
வெற்றி நிச்சயம் என்பது உண்மை.
இறைவன்
பெரும்பாலும் குருமார்கள் மூலமாகவோ, மகான்கள் மூலமாகவோதான் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து
வைக்கிறான். ‘எங்கு அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கு நான் அவதரிப்பேன்’ என்கிறான் இறைவன்.
அப்படி ஒரு மனுவாக பிறந்து குருவாகவோ, மகானாகவோ, சித்தர்களாகவோ, சாதுக்களாகவோ இந்த
பூவுலகில் அவதரிக்கின்றான்.
இப்படி
அவதரித்த குருமார்களையும், மகான்களையும் வணங்கி அவர்களின் குருவருளையும், திருவருளையும்
பெற்றால்தான் துன்பங்களை இன்பங்களாக மாற்றி வாழ்வில் வசந்தத்தை தேடிக்கொள்ள முடியும்.
அந்த
வகையில் நம் எல்லோருக்கும் குருவருள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் தனது தாயின் வாக்கிற்கிணங்க ஸ்ரீ தன்வந்திரி பீடம் அமைத்து, அங்கே மகான்களான
மஹா குழந்தையானந்த சுவாமிகள், மஹா அவதார் பாபா, சீரடிசாய், ஸ்ரீராகவேந்திரர், வள்ளலார்,
காஞ்சிபெரியவா, மகாவீரர், ரமணர், புத்தர், குருநானக், ராமகிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்திரி
சுவாமிகள், அகத்தியர் போன்ற பல்வேறு மகான்களையும், சிவலிங்க வடிவிலான 468 சித்தர்கள்
என பிரதிஷ்டை செய்து அவரவர் ஜெயந்திகளின் போது சிறப்பு வழிபாடுகளும், நாள்தோறும் ஹோமங்களும்,
ஆராதனைகளும், அன்னதானங்களும் தெய்வ பலத்துடன், தேச நலமே, தேக நலம் என்ற வகையில் சேவை
செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
அந்த
வகையில் கலியுகத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள், என்ன என்ன நடக்கும்,
நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ‘காலக்ஞானம்’
எனும் நூலில் எழுதியுள்ளார் ‘வீரபிரம்மங்காரு சுவாமிகள்’.
இவர்
கி.மு. 1604 ஆண்டு ஆந்திர மாநிலம், போத்தலூரில் மனுவாக பிறந்து வளர்ந்து வந்தார். தனது
இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் கல்வி,
கேள்வி ஞானம் இல்லாமலேயே சிறந்த ஞானத்துடன் அதிசயங்கள் பல செய்யும் அளவிற்கு சிறந்து
விளங்கினார்.
இத்தனை
சிறப்புகள் வாய்ந்த வீரபிரம்மங்காரு ஸ்வாமிகளை, சித்தையாவுடன் ப்ரார்த்தனை கோலத்தில்,
4அடி உயரத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் ஸ்தபதி திரு.லோகநாதன் அவர்களால்
மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு, இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளின் தலைமையில்,
திருத்தனி ஸ்ரீ பாலத்தத்த பீடம் ஆச்சாரிய யோகானந்தா சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் 17.01.2014 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் பூசம் நட்சத்திரத்தில்
69வது விக்ரஹமாக ப்ரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த
வைபவத்தின் போது இலவச ஆயுர்வேத முகாமும், சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இந்த
வைபவங்களில் பக்தர்கள் மற்றும் பாலஜோதிட வாசகர்கள், ஜோதிடர்கள் அனைவரும் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.
மேலும்
விபரங்களுக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை
மதுரா,
வாலாஜாபேட்டை
– 632513. தொலைபேசி : 04172-230033 / 9443330203
No comments:
Post a Comment