Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, June 17, 2013

வேடிக்கை சித்தர் நடத்தும் சித்தர்கள் ஹோமம்


சித்தர்கள் என்பவர்கள் நம் பாரத தேசத்துக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். சித்தர், மகான், ஞானி, ரிஷி என்று பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இறைவனின் பிரதிநிதிகளாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். ஆனால், ஆசி புரிந்து பக்தர்களை ஆட்கொள்வதில் இவர்கள் இறைவனுக்கும் ஒரு படி மேலே என்பதுதான் உண்மை! தனது பணிகளையும் இவர்களையே செய்யுமாறு இறைவன் சில நேரங்களில் பணித்து விடுகிறான். இதற்கு நம் ஆன்மிக நூல்களில் உதாரணங்கள் உண்டு. எனவேதான், சித்தர்களின் ஜீவ சமாதிகளையோ, அதிஷ்டானங்களையோ, பிருந்தாவனங்களையோ தரிசிப்பது என்பது பெரும் புண்ணியம் என்று தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருகிறது.

ஒரு சித்தர் சந்நிதியை தரிசிப்பதே பெரும் புண்ணியம் என்றால், வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 468 சித்தர்களையும் சிவலிங்க சொரூபத்தில் தரிசித்து, நாமே அபிஷேகம் செய்து ஆசி பெறுவது என்பது கலியுகத்தில் கிடைத்த பெரும் வரப்ரசாதம். இங்கே இத்தனை சித்தர் பெருமக்களை பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட பெரும் அனுக்ரஹம் செய்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள். நம் ஸ்வாமிகளுக்கே ‘வேடிக்கைச் சித்தர்’ என்றொரு திருநாமம் உண்டு. அப்பேர்ப்பட்ட இந்த வேடிக்கைச் சித்தர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல புனித க்ஷேத்திரங்களுக்கும் சென்று சுமார் 300&க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும் தரிசித்து, அங்கிருந்து ம்ருத்யு (மண்) எடுத்து வந்து, அதை லிங்கங்களின் அடியில் வைத்து, சக்தியைக் கூட்டி உள்ளார். 468 லிங்கங்களும் பிரதிஷ்டை ஆவதற்கு முன், 15 நாட்கள் அதிருத்ர மஹா யாகம் பிரமாண்டமாக நடந்தது.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வள்ளலார், ஷீர்டி சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரர், காஞ்சி மகா பெரியவர், மஹா அவதார் பாபாஜி, குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், கௌதம புத்தர், குருநானக், பகவான் ரமணர், மகா வீரர் போன்ற மகான்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் வழிபாடும், விசேஷ நாட்களில் சிறப்பு ஆராதனையும் திரளான பக்தர்கள் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றன.

வருகிற 19.6.2013 புதன்கிழமை தினத்தில் இருந்து துவங்கப் போகிற இந்தத் தொடர் சித்தர் யாகங்களில் கலந்து கொண்டால் நம் வாழ்வில் பற்பல பேறுகளை பெற முடியும். குருவருள் இல்லாமல் எதுவும் கைகூடாது. கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, உத்தியோகத் தடை, தாம்பத்தியத் தடை போன்ற அனைத்துக் குறைகளும் நீங்கி, பற்பல ஸித்திகளைப் பெறுவதற்கு இந்த சித்தர்கள் யாகத்தில் கலந்து கொள்ளுங்கள்.
468 சித்தர்கள் இங்கே பிரதிஷ்டை ஆன தினத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தவசீலர்களும் ஞானிகளும் வந்த வண்ணம் உள்ளனர். நடமாடும் சித்தர்களின் திருவடி இங்கே படுவதற்கு இந்த பூமி பாக்கியம் செய்திருக்க வேண்டும். அப்படி இங்கே விஜயம் செய்கின்ற தவசீலர்கள், 468&ல் ஒரு சித்தராகக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட தவசீலர்களின் வருகை இந்த பீடத்தின் சாந்நித்தியத்தை மேலும் கூட்டி உள்ளது. 

தற்போது துவங்க இருக்கின்ற சித்தர்கள் யாகத்தின்போதும் பல்வேறு புண்ணிய புருஷர்கள், தவசீலர்கள், சித்தர்கள் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களை ஆசிர்வதிக்க இருக்கிறார்கள். யாகம் நடக்க இருக்கின்ற ஒவ்வொரு நாளும் இங்கு வருகை தருகிற சித்தர் பெருமக்களே அன்றைய சிறப்பு விருந்தினர்கள். சித்தர் அவதாரங்கள்.   

அப்பேர்ப்பட்ட நடமாடும் சித்த புருஷர்களை வணங்கி, குருவருளும் இறையருளும் பெற கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் பக்தர்களை அன்புடன் அழைக்கிறார்.

- ஸ்ரீதன்வந்திரி குடும்பத்தினர், 
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்

தொடர்புக்கு : 9443330203 
E-Mail : danvantripeedam@gmail.com   1 comment:

  1. மகான்களின் அருளும் , அருகாமையும் உங்களை ஆட்கொள்ள அடியேனின் அன்பு வாழ்த்துகள் .

    ReplyDelete