Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 29, 2018

Sarva Paapa Dhosha Saapa Nivarthi Parihara Homam.....


சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமம்
 தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி அபிஷேகம்,
 ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம்
 வருகிற 09.07.2018  திங்கட்கிழமை ஏகாதசி திதியில் நடைபெற உள்ளது.

இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். அதனால் தோஷஙகள் ஏற்படுகிறது.  நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களை கர்மாக்கள், நம்மை செய்ய விடுவதில்லை. நாம் நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம். பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. பழக்க வழக்கம் தான் நம்மை பாவத்தில் இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்நம்மை விட மகா பாபிகளானவர்கள்கூடபக்தர்களாகவும், ஞானிகளாகவும் ஆகியிருக்கி்றார்கள். பாபிகளை ரட்சிக்காவிட்டால் ஈஸ்வரனுக்குத் தான் என்ன பெருமை? நாம் பாவியாக இருப்பதாலேதான் அவனுக்குப் பதிதபாவனன் என்ற விருது கிடைக்கிறது. அவனுக்கு அந்த பெருமையை நாம்தான் கொடுக்கிறோம்!

என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: பயப்படாதேஎன்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

இந்திரிய சுகங்களுக்காகச் செய்கிற பாபங்களிலிருந்து அவனை மீட்பதற்காகத்தான் ஒவ்வொரு பெரியவரும் தோன்றி ஒரு மதத்தைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். பாபத்தினால், இந்திரிய சுகத்தினால் கிடைக்கிற ஆனந்தம் ரொம்பவும் தற்காலிகமானதுதான். பரமாத்மாவைச் சேர்த்திருப்பதுதானப்பா நிரந்தரமான ஆனந்தம்என்று சொல்லி, சம்ஸாரத்திலிருந்து அதனை விடுவித்து பகவானிடத்தில் சேர்ப்பதுதான் ஒவ்வொரு மதத்துக்கும் லட்சியமாகும். மேலும் தோஷங்கள் மற்றும் சாபங்கள் எத்தனை வகைகள் என்பதை பார்ப்போம்.

ஐந்து வகையான தோஷங்கள்: 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம், 4.வந்தூலக தோஷம், 5.ப்ரணகால தோஷம் என்பதாம்.

சுமார் இருபத்தோரு வகையான நடைமுறை தோஷங்கள் :

1. கால தோஷம், 2. கிரக தோஷம், 3. ராகு தோஷம், 4. கேது தோஷம், 5. செவ்வாய் தோஷம், 6. சனி தோஷம், 7. பித்ருதோஷம், 8. மாங்கல்ய தோஷம், 9. புத்திர தோஷம், 10. மனை தோஷம், 11. வ்ருட்ச தோஷம், 12 சர்ப்ப தோஷம், 13. பட்சி தோஷம், 14. மிருக தோஷம், 15. ரிஷி தோஷம், 16. தேவ தோஷம், 17 களத்திர தோஷம், 18. கண் திருஷ்டி, 19. பிரம்ம ஹத்தி தோஷம், 20. கிரகண தோஷம், 21. பொறாமையாலும் திருஷ்டிகளாலும் சத்ருக்களாலும் ஏற்படும் தோஷம் முதலியனவாகும்.

பதிமூன்று வகையான சாபங்கள்.

1.பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம், 11) ரிஷி சாபம், 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்.

மேற்கண்ட தோஷங்கள் விலகவும், பாபங்கள் அகலவும், சாபங்கள் நீங்கவும் வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 09.07.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏகாதசி திதியில் சர்வ பாப தோஷ சாப நிவர்த்தி பரிஹார சாந்தி ஹோமமும் தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப் பொடி அபிஷேகமும், ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment