Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, June 21, 2018

Ekadasi - Amla Powder Abhishekam


நிம்மதியான தூக்கம் கிடைக்கவும், நெஞ்சுவலி நீங்கவும்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
 வருகிற 23.06.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு
தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்

காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்ற ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்ப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வருகிற ஆனி 9 ஆம் தேதி 23.06.2018 வரும் ஏகாதசி "அபரா', "நிர்ஜலா' ஏகாதசியாகும். இந்த ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் மேலும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இத்தகைய சிறப்புகள் பொருந்திய ஏகாதசி திதியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், நிம்மதியான தூக்கம் வேண்டியும், துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும்,வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 23.06.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment