Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, April 19, 2018

Chitra Pournami 2018............


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு 468 யாக குண்டங்களில் 468 பேர் பங்கேற்கும்
நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம்,
22ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜை
ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி மாபெரும் தன்வந்திரி ஹோமம்
ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி ஹோமம்
நக்ஷத்திர தோஷம் நீக்கும் 27 நக்ஷத்திர ஹோமம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 468 யாக குண்டங்களில் 468 பேர் பங்கேற்கும் நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம், 22ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜை, ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி மாபெரும் தன்வந்திரி ஹோமம், ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி ஹோமம், நக்ஷத்திர தோஷம் நீக்கும் 27 நக்ஷத்திர ஹோமம், ஸ்ரீ சத்ய நாராயண ஹோமம், இராகு-கேது அன்னாபிஷேகம், அன்ன யக்ஞம், சிவ பஞ்சாட்சர யாகம்  நடைபெறுகிறது.
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
சித்தர்கள் இயல்புகள்
சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள். இத்தகைய அற்புதமான சக்தி படைத்த சித்தர்களுக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சித்தர்கள் மற்றும் மஹான்களின் அனுஷ்டானம், அதிஷ்டானங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து அங்கிருந்து ம்ருதி (புநித மண்) கொண்டு வந்து சிவ பஞ்சாட்சர யந்திரத்துடனும் மந்திரத்துடனும் 15 நாட்கள் அதிருத்ர மஹாயாகம் செய்து 468 சித்தர்களுக்கு 468 சிவலிங்கம் என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும் சித்தர்கள் யாகமும் நடைபெற்று வருகிறது. மேலும் சித்ரா பௌர்ணமியில் 468 யாக குண்டங்கள் அமைத்து 468 குண்டங்களில் சாதுக்கள், மஹாங்கள், சித்தர்கள், சிவனடியார்கள், ஜோதிடர்கள், பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் சித்தர்கள் யாகமும், சப்த ரிஷி பூஜையுடன் மஹேஸ்வர் பூஜையும், ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவுமான ஸ்ரீமதி கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு 21 ஆண்டுகளாக குரு பூஜை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேற்கண்ட சித்தர்கள் யாகமும், ஜோதிடர்கள் குடும்பநல வேள்வியும், நக்ஷத்திர சாந்தி ஹோமமும், குழந்தை வரம் வேண்டி சந்தானகோபால யாகமும், ஆண் – பெண் திருமணத் தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகத்துடன் கந்தர்வ ராஜ ஹோமமும், சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் மஹா தன்வந்திரி ஹோமமும், சத்ய நாராயண ஹோமமும் 468 யாக குண்டங்களில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அன்ன ய்க்ஞத்துடன் இராகு – கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 10 க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள், 500க்கு மேற்பட்ட சாதுக்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்கும் விதத்தில்  நடைபெற உள்ளது.

மேற்படி வைபவத்தில் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு நாளும் நன்மை தரும் 468 சித்தர்களை வணங்கி ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் பேரருளுடன் 75 பரிவார மூர்த்திகளின் ஆசிபெற பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513,

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203


Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775



No comments:

Post a Comment