Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, May 16, 2017

Jaya Durga Homam and Maha Bhairavar Homam at Sri Danvantri Peedam, Walajapet.


18.05.2017 வியாழக் கிழமை மாலை
தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ ஜெய துர்கா ஹோமத்துடன்
மஹா பைரவர் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  அன்னைக்கும் பைரவருக்கும் உகந்த நாளான வருகிற 18.05.2017 வியாழக் கிழமை அவிட்ட நட்சத்திரம் கூடிய தேய்பிறை அஷ்டமி அன்று தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் காலபைரவர், மற்றும்  செர்ர்ணாகர்ஷண பைரவரிடம் பிரார்த்தனை செய்து  மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை  மஹா பைரவர் ஹோமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸப்த சதீயை பாராயணத்துடன், ஜெய துர்காஹோமம் மஹா அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை நடைபெற உள்ளது.

இந்த யாகங்கள்  உலக நன்மையை வேண்டியும் பக்தர்களின் குறைகள் தீர்த்து வைத்து என்றென்றும் சந்தோசத்தை அள்ளித்தர வேண்டியும்,. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும். தேவியின் அருளால் மனசஞ்சலங்கள் அகன்று நலம் பெற வேண்டியும் பக்தர்கள் அனைத்து செல்வங்களையும், இக பர நன்மைகளையும், பைரவர் மற்றும் தேவியின் அருளையும் பெற வேண்டியும் விரும்பத்தக்கவற்றைப் பெறுவதற்கும், விலக்க வேண்டுவனவற்றைத் தள்ளுவதற்கும், கன்னிகை  நல்ல கணவனை அடைய  வேண்டியும், ஸ்திரீ ஸமங்கலித் தன்மையைப் பெறவேண்டியும், மனிதன் இஹத்தில் எல்லாவற்றையும் அடைய வேண்டியும். தேவியின் மஹமையை அறிந்து அவளிடம் பக்தி செய்து இஹபர லாபங்களான புக்தி முக்தியை பெற வேண்டியும் என்றும் எல்லாம் வல்ல பராசக்தி மஹா மாய அருள் கிடைக்க வேண்டியும், ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்று அனைத்திலும் வெற்றி பெறவேண்டியும் ,,நல்லறிவுடன், நற்காரியங்களில் ஈடுபட வேண்டியும், வறுமை, துக்கம், பயம் நீங்க வேண்டியும், சமஸ்த ரோகங்கள் நீங்க வேண்டியும். விரோதிகள் நீங்கி அவர்களினால் ஏற்படும்  ஆபத்துக்கள் விலக வேண்டியும், வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருளச் செய்து புத்திரர்களும்,  பௌத்திரர்களும் அளிக்க வேண்டும் .என்ற  சங்கல்ப ப்ரார்த்தனைகளுடன்  மேற்கண்ட ஹோமங்கள் நடைபெற உள்ளது. இநத யாகத்தில் சிகப்பு நிற பழங்கள், சிவப்பு வஸ்த்திரம், வெண்கடுகு, வால்மிளகு, நாயுருவி, உளுந்து வடை,நவதாணியங்கள், உலர்ந்த பழங்கள், பட்டு வஸ்த்திரங்கள்,நெய், தேன், தாமடரை மலர்கள், வெண்பூசணிக்காய், மஞ்சள், குங்கும்ம், கொப்பரை, பலவகையான பழங்கள்,சித்ரா அன்னங்கள், யாகத்தில் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தேரிவத்தனர்.










No comments:

Post a Comment