Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 24, 2016

தன்வந்திரி பீடத்தில் முத்தான மூன்று ஹோமங்கள்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதியும் ஸ்தாபகருமான கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதியும் மாணவ மாணவியரின் நலம் வேண்டியும் முத்தான மூன்று ஹோமங்களை கீழ்கண்ட தேதிகளில் நிகழ்த்த உள்ளார். பக்தர்களும் பால ஜோதிட வாசகர் குடும்பங்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
01.10.2016 சனிக் கிழமையை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு சனி தோஷம் நீங்க சனிசாந்தி ஹோமம்,
இந்த ஹோமத்தில் சனி பகவானுக்குரிய எள்,நல்லைண்ணைய், பச்சை அரிசி, வன்னி சமித்து, போன்ற திரவியத்துடன் கருப்பு மற்றும் நீல நிற வஸ்திரங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளன.சனி சாந்தி பரிஹார ஹோமத்தில் பங்கேற்று மனமுருகி சனி பகவானை வழிபட்டால் சோதனையின் அளவு குறையும். மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் அருளால் சுகபோக வாழ்க்கையுண்டாகும், தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகம், பிரயாண லாபம் உண்டாகும்.  மேலும், அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் சனி திசை, சனி புத்தியினால் ஏற்படும் தொல்லைகளும், தோஷங்களும் விலகி ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் மற்றும் ஆனந்தம் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.இதனை தொடர்ந்து, கால சக்கரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்துக்கு, நடைபெறும்  விருட்ச பூஜையில் பங்கேற்று இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.
10.10.2016, திங்கட் கிழமை  காலை 10.00 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதி ஹோமம்.

இந்த ஹோமத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  கல்வி ஆற்றல் பெருகும். கலைத்துறை திறமைகள் அதிகரிக்கும். உங்கள் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். பேச்சாற்றல், திறன்பட செயல்பட இந்த சரஸ்வதி ஹோமம் பலன் தரும். மேலும் கல்வி, கலை, விவேகம், கற்றல் திறம், புத்தி, மனம், மனித அருமை இவை அனைத்தும்  ஸ்ரீ சரஸ்வதி அருளாசியும் கிடைக்க பெறுவர்..

ஸ்ரீ சரஸ்வதி ஹோமத்தினால் கிடைக்கும் நன்மைகள் மாணவர்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கும். கல்வியில் வெற்றி பெற உதவும். கலைதுறையில் இருப்பவருக்கும் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும். நடிப்பு, பாடல், பேச்சு, எழுத்து இவை அனைத்துக்கும் சரஸ்வதி அருள் கிடைக்கும். ஆன்மீகம், பாசம், அன்பு   இவை அனைத்தும் முழுமையாக கிடைக்க பெற நாம் சரஸ்வதி ஹோமத்தில் பங்கு பெற வேண்டும்.

அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்கள் அனைவர்களுக்கும் சரஸ்வதி ஹோமம் முழுமையான பலனை தருகிறது. நாம் வேத முறைப்படி இந்த ஹோமம் செய்வதால் பல நினைத்த காரியத்தை அடைந்து முழுமையான தீர்வு பெறலாம் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

11.10.2016, செவ்வாய் கிழமை  காலை 10.00 மணிக்கு விஜய தசமியை  முன்னிட்டு ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் மற்றும் அட்சராப்யாசம்
திருவோண நட்சத்திரம், நவராத்திரி மற்றும் விஜய தசமியை  முன்னிட்டும் சிறப்பு விஜயலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண அபிஷேகமும், குழந்தைகளுக்கான அட்சராப்யாசமும்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுதம் என்பதன் உண்மையான பயன்

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணெய் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாள் அன்று வாழ்வில் மக்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவரான ஸ்ரீ விஜயலக்ஷ்மியின் அருள் வேண்டி ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033/9488209877/9488213701

வங்கி விவரங்கள்:
Sri Muralidhara Swamigal
State Bank of India
Walajapet – 632513
A/C No. 10917462439
IFSC Code: SBIN0000775



No comments:

Post a Comment