Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 10, 2015

மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவர்கள் தன்வந்திரி பீடத்திற்கு வந்திருந்து பூமி பூஜைக்கான அடிக்கல் திறந்து வைத்த காட்சி...






தன்வந்திரி பீடத்தில் தமிழக ஆளுநர்…

ஜூலை 10ம் தேதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 73 விதமான தெய்வங்கள் தன்வந்திரி பகவானுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அவற்றில் ஒன்றான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் அமையவுள்ள மகா மண்டபத்திற்கு தமிழக ஆளுநர் வருகை புரிந்து பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக தன்வந்திரி பீடத்தில் இந்தியாவில் முதன்முறையாக ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவியை 1000க் கணக்கான ஆரிய வைஸ்ய சமூகத்தினரின் உதவியுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவிக்கு 27 x 77 என்ற அளவில் 20 லட்சம் செலவில் மகா மண்டபம் அமைப்பதை முன்னிட்டு இன்று (10.7.2015) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் மேதகு தமிழக ஆளுனர் முனைவர் கே.ரோசய்யா அவர்களுடைய திருக்கரங்களால் சங்கு ஸ்தாபன பூஜையிலும் (பூமி பூஜை), அடிக்கல் நாட்டு விழாவிலும், பின்னர் நடைபெற்ற ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஹோமம், வாஸ்து ஹோமம் மற்றும் பூசூக்த ஹோமம் ஆகிய ஹோமங்களின் பூர்ணாஹூதியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் 5 எக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தை கையிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக தன்வந்திரி பகவானை இந்தியா முழுவதும் கரிக்கோலமாக பயணம் செய்து 46 லட்சம் பக்தர்கள் எழுதிய 54 கோடி தன்வந்திரி மகா மந்திரங்களை யந்திரமாக கொண்டு நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானை தன்வந்திரி பீடத்தில் நிர்மானம் செய்து இன்று வரை 73 விதமான பரிவார மூர்த்திகளையும், 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக ப்ரதிஷ்டை செய்து தினசரி உலக நலனுக்காகவும், உலக மக்களின் உடல் பிணி, உளப்பிணி நீங்கவும் பல வகையான யாகங்களை செய்து வருகிறார்.

இதனுடன் கோ பராமரிப்பு, ஆயுர்வேத மருத்துவமனை, முதியோர் காப்பகம், மூலிகை வனம், யோக மையம் போன்றவைகளை மக்களுக்கு பயன்படும் வைகயில் அமைத்து பராமரித்து வருகிறார். வருகை புரியும் பக்தர்களுக்கு முடிந்தளவு அன்னதானமும் வழங்கி வருகிறார்.

மேலும் மேற்கண்ட அனைத்து வைபவங்களிலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து ஆர்ய வைஸ்ய சமூகத்தினர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அஜந்தா பாக்கு சங்கர்ராவ், சென்னை சேஷாத்ரி, பல்லவன் கல்லூரி குழுமத் தலைவர் ப.போஸ், மகாலட்சுமி நர்சிங் கல்லூரி பாஸ்கர் பாலாஜி, WG மோகன், WS வேதகிரி, ஆற்காடு பாஸ்கர், துர்காபவன் உதயசங்கர் மற்றும் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் ஆசி பெற்றனர் என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org

www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment