Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 6, 2015

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் நேற்று (5.07.2015) குருப்பெயர்ச்சி யாகம் சிறப்பாக நடைபெற்றது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  வரும் ஜூலை 5ம் தேதி குருப்பெயர்ச்சி யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி இந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததை முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த யாகத்தில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். வந்திருந்த அனைவருக்கும் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

மேலும் வருகிற 14.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று இரண்டாவது முறையாக காலை 5.30 மணிமுதல் 7.30 மணி வரை மகா குருப்பெயர்ச்சி யாகமும் நடைபெற உள்ளது.

இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வைபவங்களிலும் பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு…
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல்9443330203

Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment