Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, June 18, 2015

சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு சுதர்சன யாகம்..

ஜூன் 26 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் சுதர்சன மஹா ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு சுதர்சன யாகம்…

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மிகவும் கஷ்டங்களையும் மன வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டு இருளில் உள்ளார்கள். .அத்தகையவர்களுக்கு ஒளியைக் தந்து, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவித்துக் காக்கும் கடவுள்தான் சுதர்சனப் பெருமாள்.

மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள்: ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம். இந்த பஞ்ச ஆயுதங்களும் மகாவிஷ்ணுவின் பணிகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இந்த ஆயுதங்களுக்கு ஐந்து தத்துவங்கள் உள்ளன. அவை:

சக்கரம்- மனஸ் தத்துவம்; கதை- புத்தி தத்துவம்; சங்கு- அகங்காரத் தத்துவம்; வாள்- வித்யா தத்துவம்; வில்- இந்திரிய தத்துவம்.

இதில் முதன்மையானது சக்கரம் என்று சொல்லப்படும் சுதர்சனப் பெருமாள்தான். பெருமாளின் அம்சமாகவே இவர் விளங்குகிறார். எனவே, சுதர்சனரை திருமாலாகவே வணங்குகின்றோம். திருமாலை எப்பொழுதும் தன்மீது தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வார் என்றும்; திருமாளின் வாகனமாக விளங்கும் கருடனை கருடாழ்வார் என்றும்; நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளிய மரத்துக்கு திருப்புளியாழ்வான் என்றும்; பஞ்ச ஆயுதங்களின் முதன்மையான சுதர்சனத்திற்கு சக்கரத்தாழ்வார் என்றும் ஆழ்வார் பட்டம் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், மனஅமைதியின்மை, எதிலும் தோல்வி, மரண பயம், பில்லி, சூன்யம் போன்றவற்றால் ஏற்படும் பயம், வியாபாரத்தில் கஷ்டம் ஏற்படுதல், கண் திருஷ்டியால் முன்னேற்றம் தடைப்படுதல் போன்றவற்றைப் போக்கும் வல்லமை கொண்டவர் சக்கரத்தாழ்வார்தான்.

நவகிரகங்களினால் தோன்றும் பிரச்சினைகளை உடனே போக்கும் உன்னத பார்வை உடையவர் சுதர்சனர். நவகிரகங்களில் முதன்மையானவர் சூரியன். ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் உயர் நிலைக்கு வருவார் என்பது நிச்சயம். அத்தகைய சூரியனையே மறைத்து பகலை இருளாக்கியவர் சுதர்சனர்.

சுதர்சனர் தன் கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், சத்துகாக்கினி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு ஆயுதங்கள் தாங்கியுள்ளார். சுதர்சனரின் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம் தாங்கி யோக நரசிம்மர் காட்சியளிப்பார். இவரை சுதர்சன நரசிம்மர் என்பர்.

இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த சுதர்சனமூர்த்திக்கு  தன்வந்திரி பீடத்தில் தனிச் சந்நிதி அமைந்துள்ளதுதன்வந்திரி பீடத்தில் வருகிற 26.6.2015 வெள்ளிக்கிழமை சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சுன ஹோமமும், சுதர்சனருக்கு மஹா அபிஷேகமும் சுதர்சனர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. மேற்கண்ட ஹோமத்திலும், பூஜையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சுதர்சனரை பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment