Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, April 5, 2015

மே 03ம் தேதியில், தன்வந்திரி பீடத்தில் சித்ரா பௌர்ணமியில் சப்த ரிஷி பூஜையுடன் 468 சித்தர்கள் யாகம்…

சித்தர்கள் என்பவர்கள் நம் பாரத தேசத்துக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். சித்தர், மகான், ஞானி, ரிஷி என்று பல பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இறைவனின் பிரதிநிதிகளாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். ஆனால், ஆசி புரிந்து பக்தர்களை ஆட்கொள்வதில் இவர்கள் இறைவனுக்கும் ஒரு படி மேலே என்பதுதான் உண்மை! தனது பணிகளையும் இவர்களையே செய்யுமாறு இறைவன் சில நேரங்களில் பணித்து விடுகிறான். இதற்கு நம் ஆன்மிக நூல்களில் உதாரணங்கள் உண்டு. எனவேதான், சித்தர்களின் ஜீவ சமாதிகளையோ, அதிஷ்டானங்களையோ, பிருந்தாவனங்களையோ தரிசிப்பதும், குரு பூஜையில் கலந்து கொள்வதும் மாபெரும் புண்ணியம் என்று தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருகிறது.

ஒரு சித்தர் சந்நிதியை தரிசிப்பதே பெரும் புண்ணியம் என்றால், வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 468 சித்தர்களையும் சிவலிங்க சொரூபத்தில் தரிசித்து, நாமே அபிஷேகம் செய்து ஆசி பெறுவது என்பது கலியுகத்தில் கிடைத்த பெரும் வரப்ரசாதம். இங்கே இத்தனை சித்தர் பெருமக்களை பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட பெரும் அனுக்ரஹம் செய்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.

நம் ஸ்வாமிகளுக்கே ‘வேடிக்கைச் சித்தர் என்றொரு திருநாமம் உண்டு. அப்பேர்ப்பட்ட இந்த வேடிக்கைச் சித்தர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல புனித க்ஷேத்திரங்களுக்கும் சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும், அவதார ஸ்தலங்களையும் தரிசித்து, அங்கிருந்து ம்ருத்யு (மண்) எடுத்து வந்து, அதை லிங்கங்களின் அடியில் வைத்து, சக்தியைக் கூட்டி உள்ளார். 468 லிங்கங்களும் பிரதிஷ்டை ஆவதற்கு முன், 15 நாட்கள் அதிருத்ர மஹா யாகம் பிரமாண்டமாக நடந்தது.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வள்ளலார், ஷீர்டி சாய்பாபா, ஸ்ரீராகவேந்திரர், காஞ்சி மகா பெரியவர், மஹா அவதார் பாபாஜி, குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள், சேஷாத்ரி ஸ்வாமிகள், கௌதம புத்தர், குருநானக், பகவான் ரமணர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், வீரபிரம்மங்காரு, ஸ்ரீ அகஸ்தியர், மகா வீரர் போன்ற மகான்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் வழிபாடும், விசேஷ நாட்களில் சிறப்பு ஹோமங்களும், ஆராதனையும் திரளான பக்தர்கள் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்று வருகின்றன.

சித்தர்கள் மற்றும் மகான்கள் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வருகிற 03.5.2015 ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் பல்வேறு விதமான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள் கொண்டு மூலிகை வேள்வியாக நடைபெறும் இந்த 468 சித்தர் யாகங்களில் மற்றும் குரு பூஜையில் கலந்து கொண்டால் நம் வாழ்வில் பற்பல பேறுகளை பெற முடியும். குருவருள் இல்லாமல் எதுவும் கைகூடாது. கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, உத்தியோகத் தடை, தாம்பத்தியத் தடை, பித்ரு தோஷங்கள், நாக தோஷங்கள் போன்ற அனைத்துக் குறைகளும் நீங்கி, பற்பல ஸித்திகளைப் பெறுவதற்கு இந்த சித்தர்கள் யாகம் வழிவகுக்கும்.

468 சித்தர்கள் இங்கே பிரதிஷ்டை ஆன தினத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தவசீலர்களும் ஞானிகளும் வந்த வண்ணம் உள்ளனர். நடமாடும் சித்தர்களின் திருவடி இங்கே படுவதற்கு இந்த பூமி பாக்கியம் செய்திருக்க வேண்டும். அப்படி இங்கே விஜயம் செய்கின்ற தவசீலர்கள், 468-ல் ஒருவர் சித்தராகக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட தவசீலர்களின் வருகை இந்த பீடத்தின் சாந்நித்தியத்தை மேலும் கூட்டி உள்ளது.

தற்போது துவங்க இருக்கின்ற சித்தர்கள் யாகத்தின்போதும் 500க்கு மேற்பட்ட சாதுக்கள், பல்வேறு புண்ணிய புருஷர்கள், தவசீலர்கள், சித்தர்கள் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு பக்தர்களை ஆசிர்வதிக்க இருக்கிறார்கள். யாகம் நடக்க இருக்கின்ற ஒவ்வொரு நாளும் இங்கு வருகை தருகிற சித்தர் பெருமக்களே அன்றைய சிறப்பு விருந்தினர்கள். அவர்களே சித்தர் அவதாரங்கள்.  
அப்பேர்ப்பட்ட நடமாடும் சித்த புருஷர்களை வணங்கி, குருவருளும் இறையருளும் பெற கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் பக்தர்களை அன்புடன் அழைக்கிறார்.

சப்த ரிஷி பூஜை
எட்டுத்திக்கிலும் சப்த ரிஷிகள் இருந்து பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஏழு ரிஷிகள் சப்த ரிஷிகளாகவும், எட்டாவது ரிஷியாக பரமேஸ்வரனும் இருந்து அருள் பாலித்து வருகிறார்.
சப்தரிஷிகள் பிறவிகளின் தீர்மானத்தைக் கவனித்து அதற்கேற்ப நவக்கிரகங்களின் இயக்கத்தையும், காலச்சக்கரத்தின் இயக்கத்தையும் கவனிக்கிறார்கள். பிறவி வினைகளான கர்ம வினைகளை அவர்களது பக்தி, யோக, ஞான வழிகளைக் கொண்டு கால வினைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட சப்த ரிஷிகளை வணங்கி வழிபட்டால் முற்பிறவி வினைகள் அகலும். நடைமுறை யோகப்பலன்களும் சிறப்பாக அமையும். இப்படிப்பட்ட சப்த ரிஷி பூஜைகள் காசியில் விஸ்வநாதர் சந்நிதியில் தினம்தோறும் இரவு வேளையில் நடைபெற்று வருகிறது என்பது செய்தியாகும்.

அந்த வகையில் நமது தன்வந்திரி ஆரோக்ய பீடத்திலும் 468 சித்தர்களை சிவலிங்க ரூபத்தில் ஆவாஹனம் செய்து சப்தரிஷிகள் அவர்களை பூஜிப்பதும் வழக்கமாக கொண்டு குரு பூஜை நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட இந்த புண்ணிய ஷேத்திரத்தில் ஸ்வாமிகளின் குருவான பெற்றோரின் நினைவு நாளில் பெரியோர்களுக்கு நடைபெறும் மகேஷ்வர பூஜையை முன்னிட்டு சப்தரிஷி பூஜையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு : மேற்கண்ட ஹோமங்களுக்கும், பூஜைகளுக்கும் மற்றும் அன்னதானத்திற்கும் தேவையான மூலிகைகள், திரவியப் பொருட்கள், வஸ்திரங்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள், அபிஷேக சாமான்கள், காய்கறிகள் அளித்து பாக்யம் பெறலாம்.

மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி :
9443330203
Website : www.danvantritemple.org
e-Mail : danvantripeedam@gmail.com



No comments:

Post a Comment