Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 14, 2014

பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்?



பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? அதற்கான 10 அம்சங்கள் வருமாறு:-

1. நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.

2. பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.

3. பஸ்சில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும், கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப்பதாகப் பாவனை செய்து கொண்டு, குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.

4. எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிராதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

5. உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும்சம் பாதித்துக் தரும் என்று நம்புங்கள்.

6. பிரார்த்தனையின் போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

7. கடவுளிடம் கேட்க வேண்டியதைத் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப்பெற்றுக் கொள்ளத் தயராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளைவிட அவர் கொடுத்தும், கொடுப்பதும் சிறந்ததாகவே இருக்கும்.

8. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும், தராததும் அவர் விருப்பம்.

9. உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி, என்பதை உணருங்கள்.

10. யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு, குறிப்பாக சம்பந்தப்படாதவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்கு பலன் கிடைக்கு

No comments:

Post a Comment