Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 1, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…

வருடம் முழுவதும் வரும் விஷேச நாட்களுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நமது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஹோமம் நடத்த உள்ளார்.
ஆசிரியர் தின வரலாறு
.இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.. அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியின் மதிப்பு
ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது. அந்த சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
போற்றத்தக்கவர்கள்!

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தகஅறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூகமுன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று என்று கருதி ஒவொரு மாணவரும் ஆசிரியர் தினத்தில் குரு கௌரவப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
இவைகளை முன்னிருத்தி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் நலன் கருதி 5.9.2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மாணவச் செல்வங்களுக்கு எழுதுப்பொருட்கள்,சீருடைகள், அன்னதானம் வழங்கப்பட உள்ளது


No comments:

Post a Comment