Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 25, 2023

சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

 சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும்

ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது

 

அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும்அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெறும் முயற்சியினால்  ஈஸ்வர பட்டம் பெற்றவரும் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவருமான சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்ட்டுள்ளது. இவர் இங்கு பாதாளத்தில் அருள்பாலிப்பதால்  பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆகவும் பிரகாரத்தில் மனைவியுடன் ஜெய மங்கள சனீஸ்வரர் என்ற பெயரிலும்  அருள் புரிந்து வருகிறார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆலயம் உலகில் வேறெங்கும் இல்லை. இவ்வாலயத்தில் 19.05.2023 இன்று வெள்ளிக்கிழமை வைகாசி  அமாவாசை சனிபகவான் ஜெயந்தி என்பதால்  ஸ்வாமிகள் அருளானைப்படி அஷ்டம சனிஏழரை சனிஅர்த்தாஷ்டம சனிகண்ட சனி போன்ற தோஷங்கள் விலகவும்பித்ரு சாபங்கள் நீங்கவும்விபத்து பாதிப்புகள் தடுக்கவும்பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும்தொழில்வியாபாரம்விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும்சகலவிதமான திருஷ்டிகள் அகலவும்சனி திசைசனி புக்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் சனி சாந்தி ஹோமமும் பாதாள சொர்ணசனீஸ்வரருக்கு விஷேச அபிஷேகமும் வன்னி இலையால் அர்ச்சனையும் ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகமும் விஷேச அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.பங்குபெற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் வருகிற 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பால் முனீஸ்வரர்க்கும், ஸ்ரீ கருப்பண்ணசாமிக்கும் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








​வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் வருகை பாண்டிச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

 இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி  ஆகிய கற்சிலைகள் காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்தது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் பங்கேற்று மஹா தீபாராதனை செய்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தன்வந்திரி மஹா ஹோமத்திலும் 108 கலச திருமஞ்சனத்திலும் பங்கேற்று தன்வந்திரி பெருமாளையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றார். இவ்வைபவத்தில் அனந்தலை பஞ்சாயத்து துணைத்தலைவர் திருமதி மீனா பெருமாள், ஊர் நாட்டாண்மை திரு. தேவராஜ் சாமியார், வாலாஜா நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் திரு W.G. முரளி, திரு. சுரேஷ், மற்றும் திரு. கமலக்கண்ணன், திரு. ஸ்ரீநிவாசன், திரு. குபேந்திரன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர். மேற்கண்ட சிலைகள் வைகாசி 25, ஜுன் 8 மற்றும் வைகாசி 26 ஜுன் 9 ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.--










வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் கரிக்கோல பவனி வருகை

                                      வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு

ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர்

சிலைகள் கரிக்கோல பவனி வருகை

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி  ஆகிய கற்சிலைகள் மகாபலிபுரத்திலிருந்து கரிக்கோலமாக புறப்பட்டு காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரியவுள்ளது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நிகழ்த்தவுள்ளார்.

இச்சிலைகள் மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம் வழியாக கரிக்கோல பவனியாக வருகிறது. இச்சிலையானது வருகிற ஜுன் 8 வைகாசி 25மற்றும் ஜுன் 9 வைகாசி 26ம் தேதிகளில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tuesday, May 23, 2023

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குரு பெயர்ச்சி மஹா யாகம் அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது. நாள் 22.04.2023 சனிக்கிழமை

                                             வாலாஜாபேட்டை  தன்வந்திரி  பீடத்தில்

குரு பெயர்ச்சி மஹா யாகம்

அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது.

நாள் 22.04.2023 சனிக்கிழமை

 

மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றனபூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர்இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாகநடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார்குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டுஅதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

 

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்அதாவதுஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு  ஆகிறதுகுருசூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில்மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறதுகுருபகவான் ஒரு ராசியில் இரண்டுஐந்துஏழுஒன்பதுபதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார்அதே குருபகவான்ஒன்றுமூன்றுநான்குஆறுஎட்டுபத்துபன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும்  காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.

 

இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள்குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம்ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால்அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி  வருகிற 22.04.2023 சனிக்கிழமையன்று  அட்சய திரிதியை அன்று குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி  ஆகிறார். இப்பெயர்ச்சியில் அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிகள்.

மேஷம், ரிஷபம்கடகம், கன்னி, விருச்சிகம்மகரம்,  கும்பம், ஆகிய ராசியினரும் குரு புத்தி குரு திசைநடைபெறும்  அன்பர்கள் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம்குழந்தைப்பேறுதொழில்பொருளாதாரம்உயர்பதவிஅரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் மேற்கண்ட குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது.

ஒரே பீடத்தில் 468 சித்தர்கள் 18 குரு மகான்கள் கல்வி குரு சரஸ்வதி ராஜ மாதங்கி, ஆரோக்ய குரு தன்வந்திரி, வேத குரு காயத்ரி தேவி, போன்ற பல்வேறு குருவுடன் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 22.04.2023  சனிக் கிழமை  காலை 8.30  மணி முதல் 11.00 மணி வரை  குருப்பெயர்ச்சி மஹா யாகம்  மற்றும்  ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு  சிறப்பு  அபிஷேகம்  வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறதுஇம்மஹா யாகத்தில் பிரபல ஜோதிட வல்லுநரும் காளிகாம்பாள் உபாசகருமான புலியூர் நாகராஜன் அவர்கள் மற்றும் பல்வேறு ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மேற்கண்ட பூஜையில் கலந்து கொள்வதற்கு  ஒரு நபருக்கு ஒரு ராசிக்கு  சங்கல்ப காணிக்கை ரூ. 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற  ஹோம பிரசாதம் வழங்கப்படும். 

 இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு அட்சய திரிதியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்திலுள்ள லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு ஹோமம் பூஜைகளும் 1008 பொற்காசுகள் கொண்டு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

 

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

10 கீழ்புதுப்பேட்டைதன்வந்திரி நகர்,

வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்- 632513

தொலை பேசி 9443330203

Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com   

Bank Details :

Name : Sri Muralidhara Swamigal

Bank Name : State Bank of India

Account Number : 10917462439

Gpay: 9443330203

Friday, April 21, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் ஸ்ரீ ராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 30.3.2023

  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் 

ஸ்ரீ ராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் ஸ்ரீ ராம நவமி மஹோத்சவம், இன்று பங்குனி 16, வியாழக்கிழமை 30.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 7 அடி உயரமுள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள், விஷேச ஆராதனைகள் நடைபெற்றது.
ஓரே கல்லில் 14 தெய்வங்களுடன் ராஜ பரிபாலனம் செய்யும் காட்சியுடன் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்
ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகவே  இருந்தபோதும்,  மனிதனாகப்  பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக் கேற்ப  கஷ்டங்களை  அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர்      ஸ்ரீராமர். இவர்  பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருக்கு  உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் ஒரே கல்லில் ஸ்ரீ ராமர், சீதாலக்ஷ்மி,  லக்ஷ்மணர், பரதன்,  சத்ருக்னன்,  ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் குடையுடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சித்தரும் விதத்தில் ஸ்ரீ ராமருக்கு தனிச்சன்னதி அமைத்துள்ளார். இவருக்கு ஸ்ரீ ராம நவமியில் சிறப்பு ஹோமம், நவ கலச திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ ராம நவமியின் பலன்கள்
குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலன் பெருகவும், வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும், சுபகாரியத் தடைகள் விலகவும், ராஜாங்க காரியங்கள் வெற்றி பெறவும், உயர் அதிகாரிகள் மூலம் நன்மை பெறவும், ராஜ வஸ்துக்கள் பெறவும் விஷேச மூலிகைகளைக் கொண்டு திரவிய ஹோமமும் நவ கலச திருமஞ்சனமும் இதனைத் தொடர்ந்து  துளசி மாலை,  பழங்கள்,  வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு துளசி மற்றும் குங்குமம் கொண்டு திவ்ய நாம அர்ச்சனையும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகிய நிவேதனமும் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் மேற்கண்ட பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சீரடி சாய் பாபாவிற்கும் விஷேச திரவிய அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலை 5.00 மணியளவில் வசந்த நவராத்திரி நிறைவை முன்னிட்டு ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரிக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Saturday, March 25, 2023

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜ கோபுர பூமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்பு. 23.03.2023

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜ கோபுர பூமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்பு.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 89 பரிவார மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 31 அடி உயரத்தில்5நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜையாக சப்தகன்னிகள், நவகன்னிகைகள் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு பொங்கலிடுதல் வைபவம் சுமங்கலி பூஜை தன்வந்திரி மூலவருக்கு 108 கலச திருமஞ்சனம் நடைபெற்று பலவகையான வண்ண மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. முன்பாக காலை 6.00 மணிக்கு மகா கணபதி பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, கூஷ்மாண்ட பூஜை, கோ பூஜையுடன் தொடங்கி காலை 9.00 மணிக்கு அகில இந்திய விஷ்ணு சகஸ்ர நாம பாராயண கலாச்சார கூட்டமைப்பைச் சேர்ந்த ஆண் பெண் உறுப்பினர்கள் சுற்றுவட்ட நகர கிராம மக்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்று 1008 செங்கல் பூஜையுடன் பூமி பூஜை நடைபெற்றது. இவ்வைபவத்தில் வேலூர் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர். பாலாஜி அவர்கள், இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு மோகனானந்த ஸ்வாமிகள் 108 சக்தி பீடம் காமாட்சி ஸ்வாமிகள், லலிதாம்பிகை பீடம் தவத்திரு பாலானந்த ஸ்வாமிகள், நெமிலி பாலாபீடம் தவத்திரு கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள், வனதுர்கா பீடம் தவத்திரு பிரசாத் ஸ்வாமிகள், பூமாத்தம்மன் பீடம் தவத்திரு வடபாதி சித்தர் ஸ்வாமிகள், சரபேஸ்வரர் பீடம் தவத்திரு ஞானபிரகாச ஸ்வாமிகள், திருத்தணி பாலாபீடம் தவத்திரு யோகானந்த ஸ்வாமிகள், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் வினோத் காந்தி மற்றும் தொழிலதிபர்கள் ஜெ.லக்ஷ்மணன், திரு. சரவணன், திரு. மகேந்திர வர்மன், திருப்பாற்கடல் சுந்தரம், டாக்டர். ரங்கராஜன் சென்னை, முன்னாள் காவல்துறை ஆணையர் திரு. அறிவுச்செல்வம் ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். திரு. ஸ்ரீதரன். மற்றும் அனந்தலை பஞ்சாயத்துத்தலைவர் தேவகிமகாதேவன், துணைத்தலைவர் மீனா பெருமாள், அரசியல் பிரமுகர்கள் டபிள்யூ. ஜி. முரளி,திரு.சுரேஷ், வாலாஜாபேட்டைநகரகிராமபொதுமக்கள்மற்றும் பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மூலவர்ஸ்ரீதன்வந்திரிபெருமாளுக்கு 108கலச திருமஞ்சன வைபவத்துடன் மாபெரும்புஷ்பயாகம்விஷ்ணுசகஸ்ரநாம பாராயணத்துடன் மாலை வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் விஷேச அருட் பிரசாதமும்டாக்டர்ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்தன்திருக்கரங்களால்  வழங்கினார்.இந்ததகவலைதன்வந்திரிகுடும்பத்தினர்தெரிவித்தனர்.





 








Wednesday, March 8, 2023

மாசிமகம் - பௌர்ணமி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் விஷேச ஹோம பூஜைகள் நடைபெற்றது.

   மாசிமகம் - பௌர்ணமி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் விஷேச ஹோம பூஜைகள் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 06.03.2023 திங்கள்கிழமை மாசிமகம் - ஸ்ரீ ஐஸ்வர்ய பித்யங்கிரா தேவியின் பிரதிஷ்டா தின வைபவம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் விஷேச மூலிகைகளைக் கொண்டு சிறப்பு ஹோமமும் ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவிஸ்ரீ வாஸ்து பகவானுக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பௌர்ணமியை முன்னிட்டு 7.3.23 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகமும் அன்ன தோஷங்கள் விலக ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்று மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஐந்தாவது நாளாக 108 நாட்கள் 108 கலச திருமஞ்சன திருவிழா சுமங்கலி பூஜையுடன் நடைபெற்றதுஇதில் திரளான பக்தர்கள்சுமங்கலி பெண்கள்,  கலந்து கொண்டு திருவருளுடன் குருவருளையும் பெற்று சென்றனர்பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.