சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும்
ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும், அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெறும் முயற்சியினால் ஈஸ்வர பட்டம் பெற்றவரும் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவருமான சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் இங்கு பாதாளத்தில் அருள்பாலிப்பதால் பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆகவும் பிரகாரத்தில் மனைவியுடன் ஜெய மங்கள சனீஸ்வரர் என்ற பெயரிலும் அருள் புரிந்து வருகிறார்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆலயம் உலகில் வேறெங்கும் இல்லை. இவ்வாலயத்தில் 19.05.2023 இன்று வெள்ளிக்கிழமை வைகாசி அமாவாசை சனிபகவான் ஜெயந்தி என்பதால் ஸ்வாமிகள் அருளானைப்படி அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி போன்ற தோஷங்கள் விலகவும், பித்ரு சாபங்கள் நீங்கவும், விபத்து பாதிப்புகள் தடுக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், தொழில், வியாபாரம், விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும், சகலவிதமான திருஷ்டிகள் அகலவும், சனி திசை, சனி புக்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் சனி சாந்தி ஹோமமும் பாதாள சொர்ணசனீஸ்வரருக்கு விஷேச அபிஷேகமும் வன்னி இலையால் அர்ச்சனையும் ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகமும் விஷேச அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.பங்குபெற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment