Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, November 18, 2022

Patrakali Yagam Special Poojai at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 103 வயது  நம்பூதிரி தலைமையில் நடைபெற்ற   லட்ச ஜப பத்ரகாளி யாகம் நிறைவு 3 நாட்களாக நடைபெற்றது. 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  கடந்த 16ம்தேதி புதன்கிழமை அன்று மாலை  லட்ச ஜப பத்ரகாளி யாகம் தொடங்கியது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாலா பகுதியை சேர்ந்த 103 வயதுடைய  விஷ்ணு நம்பூதிரி தலைமையில், ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி குழுவினர் 3 நாட்களாக  பல்வேறு சிறப்பு பூஜைகளுடன்  1லட்சத்து 700 முறை பத்ரகாளி ஜெபம் செய்து யாகத்தை நடத்தினர். 

  பத்ரகாளி யாகத்தை முன்னிட்டு கேரள குருதி பூஜையும்,  பத்ரகாளிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த லட்ச ஜப பத்ரகாளி யாகம் இன்று 18ம்தேதி சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது. 

இதை தொடர்ந்து  மாலையில் லட்ச ஜப மஹா தன்வந்திரி யாகம்  தொடங்கியது.  2 நாட்கள் நடைபெறும் இந்த யாகத்தை தொடர்ந்து  மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு 81 கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது. 

இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  










Thursday, November 17, 2022

2nd Day Latcha Jaba Patrakali Yagam and Kuruthi Poojai - Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்2வது நாளாக லட்ச ஜப பத்ரகாளி யாகம்               கேரள குருதிபூஜையும் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  நேற்று 16ம்தேதி புதன்கிழமை லட்ச ஜப பத்ரகாளி யாகம் தொடங்கியது.

இன்று 17ம்தேதி 2 வது நாளாகதொடர்ந்து லட்சஜப பத்ரகாளி யாகம் நடைபெற்றது.
முன்னதாக லட்சஜப பத்ரகாளி யாகத்தை முன்னிட்டு  கேரள முறை குருதி  பூஜையும் நடைபெற்றது.    

இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 






Wednesday, November 16, 2022

Bairavar Jeyanthi 1008 Kg Viboothi Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள்.  சிறப்பு பூஜைகள் புரோகிதர்கள் நலன் கருதி 12 வது ஆண்டு சிறப்பு யாகம் தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர் பங்கேற்பு 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில்  ஸ்ரீஅஷ்ட கால  மகா பைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என  தன்வந்திரி   பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில்  பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

 தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இன்று நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு 64 பைரவர்களுக்கான ஹோமங்கள்  நடைபெற்றது. பின்னர்  ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1008 கிலோ விபூதியால்  சிறப்பு அபிஷேகமும் ,  வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு , மகா தீபாராதனை  நடைபெற்றது. 

சொர்ணாகர்ஷண  பைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

 பைரவர்1008   கிலோ விபூதி அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று  பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து  மனமுருக  பைரவரை வழிபட்டு சென்றனர். 

மேலும்  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி12 வது ஆண்டாக சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது. இதில் தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தை சேர்ந்த  நிர்வாகிகள் உள்பட  பலர் கலந்து கொண்டனர். மாலை லட்சஜப பத்ரகாளி யாகம் தொடங்கியது. 

 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.








Tuesday, November 15, 2022

1008 Kg Bairavar viboothi Abishegam, Pathrakali Yagam on16.11.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நாளை கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள். மாலை  லட்சஜப பத்ரகாளி யாகம்நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில்  ஸ்ரீஅஷ்ட கால  மகா பைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என  தன்வந்திரி   பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில்  பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

 தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்   நாளை ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1008 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெறுகிறது.

இதற்கான  பூர்வாங்க பூஜைகள்  நேற்று  14ம்தேதி திங்கள் கிழமை  ஹோமங்களுடன் தொடங்கியது, இன்று 15ம்தேதி இரண்டாம் கால  பூஜைகள் நடைபெற்றது.

மேலும் நாளை  16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.

நாளை  மாலை லட்சஜப பத்ரகாளி யாகம் தொடங்கி  நடைபெறுகிறது.






 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Monday, November 14, 2022

Bairavar Jeyanthi 1008 Kg Viboothi Abishegam on 16.11.2022 at SriDanvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 16ம்தேதி   கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள்.    இன்று ஹோமத்துடன் பூர்வாங்க பூஜை நடைபெற்றது.







வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில்  ஸ்ரீஅஷ்ட கால  மகா பைரவருடன்  நவ பைரவர்களாக காட்சி தரும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளனர்.


இது தவிர சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என  தன்வந்திரி   பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில்  பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1008 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெற உள்ளது.
எண்ணிலடங்காத பலன்களும், நோய் பயம் மற்றும் எதிரிகள்  தொல்லைகள் நீங்கிடவும் வேண்டி பக்தர்கள் இந்த விபூதி அபிஷேகத்தில்  பங்கேற்று ஸ்ரீ அஷ்டகால மகா பைரவரை வணங்கி  பயன் பெறலாம்.

இதற்கான  பூர்வாங்க பூஜைகள் இன்று 14ம்தேதி திங்கள் கிழமை  ஹோமங்களுடன் தொடங்கி நடைபெற்றது.

மேலும் 16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.

 இன்று நவம்பர் 14ம்தேதி (திங்கள்கிழமை) ஐயப்பன் சன்னதி அமைக்கப்பட்டதின் 12ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு  ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமமும்,  பால், சந்தனம், நெய், மஞ்சள், பன்னீர் , திரவிய பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.

ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமிகளை தரிசனம் செய்தனர்.
 
 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Sunday, November 13, 2022

Sri Karthikai kumaran Homam Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  101  நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம்.  ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமங்கள்  சிறப்பு அபிஷேகம்

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,   ஐப்பசி 25 ( நவம்பர்11ம்தேதி)  முதல்  வருகிற மாசி  7 ( பிப்ரவரி  19ம்தேதி ) முடிய  தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள  முப்பெரும் யாகங்கள்    கடந்த 11ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இதன்படி   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

 மூன்றாவது  நாளாக இன்றும் 13ம்தேதி  ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 

 மேலும் இன்று  குழந்தை பாக்யம் பெற வேண்டி நடைபெறும் சந்தான கோபால யாகம், எதிரிகள் தொல்லை நீங்கிட வேண்டி நடைபெறும் சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியவையும்நடைபெற்றது.

 பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் உள்ள ஸ்ரீ கார்த்திகைக்குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜை நடைபெற்றது. 

மாலை  ராகு கால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமமும், சரபேஸ்வரருக்கு  பால்,  பன்னீர், திரவிய பொடி,  மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு  அபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது. 

 அபிஷேகம்  மற்றும்  பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  விளக்கு ஏற்றி  ஸ்ரீ சரபேஸ்வரரை  தரிசனம் செய்தனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.








Saturday, November 12, 2022

Mupperum Yagams 2nd Day, Sankadahara Sathurthi Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 101  நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம். சங்கடஹர சதுர்த்தியை  முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,   ஐப்பசி 25ம்தேதி முதல்  வருகிற மாசி மாதம் 7ம்தேதி வரை  தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள யாகம்   நேற்று 11ம்தேதி தொடங்கியது. 

இதன்படி   நவம்பர் 11ம்தேதி முதல் பிப்ரவரி 19ம்தேதி முடிய   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

இரண்டாவது நாளாக இன்று 12ம்தேதி  ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 

 மேலும் இன்று சங்கடஹர சதுர்த்தியை  முன்னிட்டு ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும், ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும்  சிறப்பு ஹோமமும், பால்,  பன்னீர், திரவிய பொடி,  மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு  அபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்தனர். 

 வருகிற ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1000 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெற உள்ளது.  மேலும் 16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.







இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.