Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 17, 2022

Sani shanthi Homam at Sri Danvantri Arokya Peedam 17.9.2022

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிக்கிழமைகளில் சனி சாந்தி ஹோமங்கள்

வருகிற 2023ம் ஆண்டில் திருக்கணிதப்படி நிகழும் சுபகிருது  வருடம் ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமையும்,  வாக்கியப்பஞ்சாங்கப்படி  வருகிற மார்ச்  மாதமும் சனிப்பெயர்ச்சி  நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியில்  சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப  ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

சனிப்பெயர்ச்சியை  முன்னிட்டு  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்   ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, வருகிற ஜனவரி 17ம்தேதி  சனிப்பெயர்ச்சி மகா யாகம்  மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த சனிப்பெயர்ச்சி மகா யாகத்தை முன்னிட்டு  இன்று 17.9.2022ம் தேதி சனிக்கிழமை  காலை 10.30 மணி

முதல்  12 மணி வரை  பக்தர்கள் பயன்பெறும் விதத்தில்  சனி சாந்தி ஹோமம்  மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  ஸ்ரீ பாதாள சொர்ண( தங்க) சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு பூ-ஜைகள், எள் தீபம் ஏற்றி  பிரார்த்தனைகள்  நடைபெற்றது. 

இதில்  சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள்  விலகவும் மற்றும்  ரிஷபம்,  கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம்,  மகரம், மீனம்  ராசிக்காரர்கள், சனி திசை, சனி புத்தி நடப்பவர்களுக்கு  பரிகாரம் செய்யப்பட்டது. 

சனிசாந்தி ஹோமத்தின் சிறப்புகள் 

முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜென்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை, சனி புத்தியால் ஏற்படும்  அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும், ஆயுள் தோஷம்,  இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும், தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகத்தை முன்னிட்டு பிரதி வாரம்  சனிக்கிழமைகளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலை 10.30மணியளவில்  நடைபெறும்  சனி சாந்தி ஹோமங்களிலும்  மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர்  மற்றும் ஸ்ரீஜெய மங்கள சனீஸ்வரருக்கு நடைபெறும்  பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து சனிபகவானை வணங்கி பலன் பெறலாம்

மேற்கண்ட தகவலை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Prime minister Narendra Modiji birthday Homams at Sri Danvantri arokya peedam

 மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமங்கள் & பூஜைகள்






 இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அருளாணைப்படி , பாரத தாயின் தவப்புதல்வர், மதிப்பிற்குரிய  பாரதப்பிரதமர் திரு.நரேந்திர தாமோதரதாஸ் மோடிஜி
அவர்களின்  72 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி  இன்று 17.9.2022ம்தேதி சனிக்கிழமை காலை
 ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம்,  சத்ரு சம்ஹார ஹோமம்  போன்ற பல்வேறு  வகையான  ஹோமங்களும், பாரதப்பிரதமர்  திரு.நரேந்திர மோடிஜி அவர்களின் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம்,  விருச்சிக லக்னம் என்ற பெயரில் மகா சங்கல்பம் செய்யப்பட்டு அதற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.

மேற்கண்ட ஹோமத்தின் பிரசாதம் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் இன்று பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Sri maragathambigai sametha sri maragatheeswarar Kalasa abishegam at Danvantri Arokya Peedam



 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு  கலச அபிஷேகம்

 வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,   உடல் நோய், மன நோய் நீங்கவும், உலக நன்மைக்காகவும்   16.9.2022ம்தேதி  வெள்ளிக்கிழமை ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமம்,        ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

முன்னதாக  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு  கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்  தங்களின் உடல்  நோய் மற்றும் மன நிம்மதி வேண்டி  வழிபட்டனர். 

ஹோமம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ  முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும் , ஆசியும் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


Friday, September 16, 2022

Sasti Homam and Sri karthikaikumaran Abishegam at sri Danvantri Arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஷஷ்டி திதியை முன்னிட்டு 

சத்ரு சம்ஹார ஹோமம் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகம்

 இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , 15.9.2022ம்தேதி வியாழக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் பெற்றோர்களின் குறை தீரவும்,தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்திஅடையவும் ஆண், பெண்கள் வாழ்கை மலரவும், 

குழந்தை பாக்யம் வேண்டியும், பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கும், எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின்

 தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும்,வஞ்சகமும், சூது மதியினரை வெல்லவும், சத்ரு ஜெயம், தீர்க்க ஆயுள், ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம்  பெற்று நிவாரணம் கிடைக்கவும், கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம்உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிககும் நிவர்த்தியைத் தரவல்லவும் பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

நிறைவாக  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற


பொருள்களுடன் அஷ்ட திரவ்ய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Thursday, September 15, 2022

Panchamuga Varahi Homam and poojai at sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நேற்று 14.9.2022    மற்றும் இன்று  15.9.2022ம்தேதி ஆகிய இரு நாட்கள்   பஞ்சமி திதியை முன்னிட்டு  ஸ்ரீபஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், உலகில் முதன் முதலாக ஒரே கல்லில் 5 அடி உயரத்தில், 4அடி அகலத்தில்  வராஹி, காளி, சூலினி, பகுளாமுகி, திரிபுரபைரவி என 5 முகங்களுடன்  காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு ஆலயம்  அமைந்துள்ளது.

 நேற்று மாலையில்  பஞ்சமி திதியை  முன்னிட்டு   ஸ்ரீ  பஞ்சமுக வராஹி அம்மனுக்கு  சிறப்பு  வராஹி ஹோமமும், அம்மனுக்கு  அபிஷேகம்  செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.  

 ஹோமம்  மற்றும்  சிறப்பு பூஜைகளில் கலந்து  கொண்ட  பக்தர்கள்  விவசாய நிலங்களில்  விளைச்சல் பெருக,  காரிய தடைகள் விலக, சகல  தோஷங்களிலிருந்து விடுபட, கண்திருஷ்டி விலகவும், சத்ரு உபாதைகள் விலகவும், மகாலஷ்மி கடாட்சம் கிடைக்கவும், குடும்ப நிம்மதி  போன்றவை  உள்பட பல்வேறு  வேண்டுதல்களுக்காக பஞ்சமுக வராஹி அம்மனை வணங்கி  தேங்காயில்  நெய் வீட்டு  தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை 





ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 

Saturday, September 10, 2022

SPECIAL 5 HOMAMS AT SRI DANVANTRI AROKYA PEEDAM

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  பௌர்ணமியை  முன்னிட்டு

   ஐம்பெரும் யாகங்கள் 


 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’ டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின்  நலன் கருதி இன்று  10.9.2022ம்தேதி சனிக்கிழமை  , பௌர்ணமியை முன்னிட்டு  காலை 10 மணி முதல் 12  மணி வரை,

 ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் , பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் ,தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், சனி சாந்தி ஹோமம் , ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்  ஆகிய ஐம்பெரும் யாகங்கள் நடைபெற்றது.

பின்னர்  பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீ ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் அன்னாபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது.

 சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கு  சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் கிரக  ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும் , பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகலதோஷங்களும் நீங்கி  விரைவில்  திருமணம் நடைபெற  வேண்டியும்,

தம்பதிகளுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்க வேண்டியும், குழந்தை பாக்யம் வேண்டியும், வாழ்வில்  அனைத்து நற்பலன்களை  பெற வேண்டியும் வழிபட்டு சென்றனர். 

இந்த  ஹோமங்கள் மற்றும் பூஜைகளில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு  ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  அருள் பிரசாதமும் ஆசிர்வாதமும் வழங்கினார்.





இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Friday, September 9, 2022

POURNAMI SPECIAL HOMAM at SRI DANVANTRI PEEDAM

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,  நாளை 10ம்தேதி 

 பௌர்ணமியை  முன்னிட்டு  சிறப்பு யாகங்கள்


வாலாஜாபேட்டை 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 

‘யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’ டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின்  நலன் கருதி  நாளை 10.9.2022ம்தேதி சனிக்கிழமை  , பௌர்ணமியை முன்னிட்டு  காலை 10 மணி முதல் 12  மணி வரை, ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் , பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற  சந்தான கோபால ஹோமம் ஆகியவை  நடைபெற உள்ளது. 


கந்தர்வ ராஜ ஹோமம்

திருமணத்தடைகள் உள்ள  ஆண்களுக்கு ஜாதக ரீதியாக  உள்ள தோஷங்களும், கிரக  ரீதியாக உள்ள தோஷங்களும்,நவக்கிரக தோஷங்களும் , பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகலதோஷங்களும் நீங்கி  விரைவில்  திருமணம் நடைபெற  வேண்டி கந்தர்வ ராஜஹோமம்  நடைபெற உள்ளது.  மேலும் பீடத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட  கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று  எண்ணற்ற  ஆண்கள்  பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். 


சுயம்வர கலா பார்வதி ஹோமம் 

திருமணத்தடைகள் உள்ள  பெண்கள் திருமணத்தடை நீங்கி  விரைவில் திருமணம் நடைபெற வேண்டி  சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது . இந்த ஹோமத்தில்  முதலில் கணபதி பூஜை, கிரக தோஷங்கள்  நீங்குவதற்காக  நவகிரக ஹோமம்  நடத்தப்பட்டு பின்னர்  சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது.இந்த சுயம்வர கலா பார்வதி ஹோமம்  செய்வதின் பலன் ஏராளம் .

திருமணத்தடைகளும் நீங்கி  உடனே திருமணம் செய்து  மகிழ்ச்சியாக வாழலாம் .

மனைவிக்கு ஏற்ற கணவர்  அமைவார்கள்.  மேலும் தம்பதிகளுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும்  அன்பாகவும்,மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும். 


சந்தான கோபால யாகம் 

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில்  குழந்தை பாக்யம் வேண்டி  சங்கல்பம் செய்து  சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம்  செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில்  குழந்தை பாக்யம்  பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.  கணவன், மனைவிக்குள் மிகுந்த அன்னியோன்னியம்  ஏற்படும்.  நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும் 


இந்த  ஹோமங்களில் பங்கேற்கும் நபர்களுக்கு  ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  அருள் பிரசாதமும் ஆசிர்வாதமும் வழங்க உள்ளார். மேலும் 468 சித்தர்கள் ஆசிர்வாதமும் கிடைக்கும் . இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருள்கள், மளிகை பொருள்கள், அன்னதான பொருள்கள் , பூர்ணாஹூதி§ வஸ்திரங்கள், சிவாச்சாரியார் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற  பல்வேறு பொருள்கள் தானம் வழங்கி  குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறை பணியில் ஈடுபட  அன்புடன் அழைக்கின்றோம். 


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் 

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை-632513.

இராணிப்பேட்டை மாவட்டம்.

செல் :94433 30203.