Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, December 27, 2018

Hanuman Jayanti 2019


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஹனுமத் ஜெயந்தி விழாவைமுன்னிட்டு 04.01.2019 முதல் 06.01.2019 வரை
நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 05.01.2019 சனிக்கிழமை ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு 04.01.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேய ஹோமமும், 05.01.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை 108 கலச மூலிகை தேன் திருமஞ்சனமும், 1008 வடைமாலை, துளசிமாலை, வெண்ணை சாற்றும் வைபவமும், 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை துளசி தீர்த்த திருமஞ்சனமும், 1008 புஷ்பங்களால் மஹா அர்ச்சனையும், செந்தூரம் சாற்றும் வைபவமும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஹனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்வாமிகளின் ஆசியுடன் கீழ்கண்ட பலன்களுக்காக மூன்று நாட்கள் வைபவமாக நடைபெற உள்ளது.

தனாகர்ஷணம் பெறவும், கல்வியில் மேன்மையும்,  செல்வ வளம் பெற்றிடவும், மன வலிமையும் தைரியமும் கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெறவும், சவால்களை வென்று இலட்சியத்தை அடைந்திடவும், தொழில் மேன்மையும், அரசியல் வெற்றியும், உயர்பதவி பெற்றிடவும், மன பயங்கள் அகலவும், ஜாதகத்தில் உள்ள சகலவித சனி கிரக தோஷங்களும் நவக்கிரக தோஷங்களும் விலகிடவும் ஹனுமத் ஜெயந்தியில் நடைபெறும் வைபவங்களில் பங்கேற்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயரின் அருள் பெற்று மன தைரியத்துடன் வாழ மேற்கண்ட வைபவங்கள் பலன் தரும்.

108 மூலிகை தேன் கொண்ட கலசங்களால் திருமஞ்சனம் :

ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 10 ஆயிரம் மைல்கள் கரிக்கோலமாக வந்து, பக்தர்கள் கைப்படை எழுதிய 10 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு அமைந்துள்ள 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தியன்று 108 கலசங்களில் மூலிகை தேன் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தேனில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது அனைவரும் அரிந்ததே. அத்தகைய சிறப்புமிக்க  திரவியமான தேன் கொண்டு நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்து கொள்வதன் மூலம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷத்தினை பெறுவதோடு, தனாகர்ஷணம் பெற்று செல்வச்செழிப்பை அடைந்திடலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். பங்கேற்கும் அனைவரும் தேன் பிரசாதத்தை ஔஷதமாக பெற்று ஆரோக்யத்துடன் லக்ஷ்மி கடாட்சமும் மஹா சரஸ்வதியின் அருளும் ஒருங்கே கிடைக்கப் பெறலாம். ஆகவே இந்த திருமஞ்சனத்தில் பங்கு பெற்று கல்விச் செல்வமும் தனாகர்ஷணமும், பெற்று வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து வித தோஷங்களில் இருந்தும் விடுபடுங்கள்.

9 அடி உயர ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் 9 படிகளில் உள்ள 9 விதமான ஆஞ்சநேயரின் தரிசனமும், அருளும் பெற்று ஆரோக்யத்துடன் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத ராம பிரான் அருளுடன் பக்த ஹனுமானின் ஆசியோடும் குருவருளையும் பெற்றிடுங்கள். இந்த பூஜைக்கு தேவையான தேன், துளசி மாலை, பழமாலை, பூமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம்பழம் மாலை, தேங்காய், வெண்ணெய், செந்தூரம் மற்றும் பூஜைக்கான சாமான்கள், அன்னதானத்திற்கான மளிகை பொருட்கள் அளித்து இவ்விழாவில் பங்குபெற்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் பரிபூரண அருளுடன் குருவருளும் பெற்றிட வாருங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



Wednesday, December 26, 2018

Kalyana Ganapathi Yagam


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கல்யாண வரம் தரும் கல்யாண கணபதி யாகம்.நாளை 27.12.2018 காலை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  உலகம் அனைத்திற்கும் முழுமுதல் கடவுளும், காரியத்தடைகளை நிவர்த்தி செய்து வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொடுத்து நம்மை காக்கும் கடவுளான மஹா கணபதியை வேண்டி நாளை 27.12.2018 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆண் – பெண் திருமணத்தடைகள் விலக மாபெரும் கல்யாண கணபதி யாகம் சிறந்த வேத பண்டிதர்களை கொண்டு நடைபெற உள்ளது.

இந்த யாகத்தின் மூலம் ராகு – கேது தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், அஷ்டம சனி, ஜன்ம சனி போன்ற நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், பல்வேறு பாபங்கள், சாபங்கள் நீங்கி கல்யாண கணபதியின் அருள் பெற்று விரைவில் திருமணம் நடைபெற வேண்டி அஷ்ட திரவியங்களுடன், 64 மூலிகைகள் கொண்டு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இந்த யாகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Tuesday, December 25, 2018

2019 Calendar Releasing Ceremony - Kalabhairava Yagam ....


தன்வந்திரி பீடத்தில்வருகிற 29.12.2018 சனிக்கிழமைவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில்
காலண்டர் வெளியீட்டு விழாவும்காலபைரவர் யாகமும் நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 29.12.2018 சனிக்கிழமை காலை மாலை இருவேளையும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண பைரவர் யாகம், காலபைரவர் யாகம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.

ஸ்வர்ண பைரவர் யாகம், காலபைரவர் யாகம் :

ஸ்ரீ காலபைரவர ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம் நடைபெற்று பைரவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

இந்த யாகத்தில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது. யாகத்தில் வர வேண்டிய பணம் வந்து சேரவும், தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை அமைய வேண்டியும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லவும் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

மேலும் அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும், பணம் சார்ந்த பிரச்னைகள் தீரவும், கர்மவினைகள் தீரவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும், வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் மேற்கண்ட யாகங்கள் நடைபெற உள்ளது.

2019 ஆம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியீட்டு விழா :

இதனை தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் அழகிய வண்ணத்தில் ஆரோக்ய கடவுளின் அழகு திருமேனியுடன் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியிடப்பட உள்ளது. இதில் சென்னை சாய் டிவி நிர்வாக இயக்குநர் சாய்பிரேமி திரு. கணேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்  தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Saturday, December 22, 2018

Pournami Yagam ....


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்இன்று 22.12.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 22.12.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும், ஆண் பெண் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமத்துடன் பங்குபெற்ற ஆண் பெண்களுக்கு கலசாபிஷேகமும் மாங்கல்ய பூஜையும் நடைபெற்று யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Friday, December 21, 2018

Pushpa Yagam 2018 ...


வருகிற 23.12.2018
ஆருத்ரா நாளில் ஆரோக்ய பீடத்தில்
ஆரோக்ய கடவுளுக்கு ஆரோக்ய ஹோமத்துடன்60 வகையான மலர்களுடன்ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டுமஹா புஷ்பயாகம்நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஆருத்ரா தினத்தில் 60 வகையான மலர்களுடன் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஆரோக்ய ஹோமத்துடன் மாபெரும் புஷ்பயாகம் நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகத்தில் பிரபல திரைப்பட நடிகைகலைமாமணிதிருமதி. தேவயானி ராஜகுமாரன், பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ராஜகுமாரன், பிரபல சின்னத்திரை இயக்குனர்கோலங்கள் புகழ்திரு. V.திருச்செல்வம், திரைப்பட நடிகர்கலைமாமணிடாக்டர். பூவிலங்கு மோகன், திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. வையாபுரி அவர்கள், இவர்களுடன் பல்வேறு திரைப்பட, சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டிச்சேரி திருமதி. சாந்தகுமாரி சுகுமாரன் குடும்பத்தினர்கள் செய்து வருகின்றனர்.

புஷ்பங்களின் மஹிமை :

பகவானை ஆராதித்து மகிழ்ச்சி அடைவதில் பல்வேறு வழிகள் உள்ளது. அதில் மிகவும் உசிதமானது புஷ்பங்களால் அராதிப்பது என்பது அனைவரும் மகிழ்ச்சியுடன் முன்னொருவர். அதன்மூலம் மன அமைதியும், மகிழ்ச்சியும், ஏற்பட்டு பல்வேறு வகையான நன்மைகளை பெறுவர். நமது வழிபாட்டில், பூஜையில் பிற பொருட்களை விட பூக்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வதும், ஆராதிப்பதும் ஆகும். இவ்வைபவத்தை பக்தர்கள் புஷ்பாஞ்சலி என்றும், புஷ்பார்ச்சனை என்றும், புஷ்ப வழிபாடு என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்து மகிழ்கின்றனர். இவற்றை பெரிய அளவில் பல்வேறு வகையான புஷ்பங்களை கொண்டு வழிபாடு செய்வதே புஷ்ப யாகம் ஆகும். இதனால் உடல் நலமும், மன நலமும் பெறலாம்.

புஷ்ப யாகத்தில் சங்கு புஷ்பம், செந்தாமரை, வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை.கொன்றை, மகிழம், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருது, மருதாணி, தவனம், ரோஜா, கருந்துளசி, துளசி, மனோரஞ்சிதம், பவழமல்லி,  மரிக்கொழுந்து, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி செம்பருத்தி, அடுக்கு அரளி, தாழம்பூ, போன்ற 60 க்கும் மேற்பட்ட மலர்களுடன் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

புஷ்ப அர்ச்சனையால் ஏற்படும் நன்மை :

நாம் வாழும் இடத்திலும், பணி செய்யும் இடத்திலும், ஆலயங்களிலும், ஏற்படும் தோஷங்கள் நீங்கி, பகைமை விலகி மனசாந்தி பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம். மேலும் தனலாபம், தொழில் முன்னேற்றம் கூடும்.நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். மன சஞ்சலம் நீக்கும். புத்திக்கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்ற வற்றைத் தரும்.சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். மனநோய் போக்கும். தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்; வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும்.
பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. செய்த பாவங்கள் விலகும். தீராத நோய்களும் தீரும். நீண்ட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் விலகிவிடும். கடும் நோய்கள் காணாமல் போய்விடும். மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சிக்கு நிவாரணம் கிடைக்கும். ரத்தக்குழாய் அடைப்புக்கு தீர்வு கிடைக்கும். கட்டிகளுக்கும், கண்நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும்  இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் புஷ்பாஞ்சலி, புஷ்பயாகம், புஷ்ப அர்ச்சனை என்று போற்றப்படும் புஷ்பயாகம்  ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் வைபவத்தில் கலந்துகொண்டு மனநோய், உடல் நோய் நீங்கி ஆத்ம சுத்தி ஏற்பட்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்கிறார் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Santhana Gopala Yagam - Gandharva Raja Homam - Swayamvara Kalaparvathi Yagam


வருகிற 22.12.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு
 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள்
 பௌர்ணமியில் நடத்தும் முப்பெரும் யாகங்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 22.12.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.

தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம்
சந்தான கோபால யாகம் பலன்கள் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது.

இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருள் பெற ஸ்ரீகிருஷ்ணருக்கு வெண்ணை சார்த்தி வழிபடும் பொழுது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்
கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள் :

இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் சுயம்வர கலாபார்வதி யாகமும் பெண்களுக்கு கலசாபிஷேகமும், மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.

பௌர்ணமியில் நடைபெறும் மேற்கண்ட முப்பெரும் யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து பிரசாதம் வழங்க உள்ளார். இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203