Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, March 22, 2018

14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழா.....


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.
14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழா.
நாளை முதல் ஆரம்பம்.

எம்பெருமாள், ஸ்ரீய:பதியாய் அவாப்தஸமஸ்தகாமனாய், அனந்த கல்யாண குணநிதியாய் பல திவ்ய தேசங்களிலும் மற்றும் பல க்ஷேத்திரங்களிலும் விஷ்ணுவின் பல திருநாமங்களில் எழுந்தருளி உள்ள நிலைகளில் ஸத்ய வ்ரத க்ஷேத்ர ஸமீபத்தில் கோயில் கொண்டு மஹாவிஷ்ணு அம்சமாக எழுந்தருளி பக்தர்களின் அபிமான க்ஷேத்திரமாகவும், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், ஆகிய ஷண்மதங்களை கொண்டு ஆதிசங்கரர் வழியில் ஷண்மத பீடமாக திகழும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரகத்துடன், ஸ்ரீவத்ஸ வம்சத்தில், ஸ்ரீ.உ.வே கம்பராஜபுரம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமிகள் - ஸ்ரீமதி.கோமளவல்லி தம்பதிகளுக்கு குமாரராக அவதரித்த கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, மார்ச் 23 முதல் மார்ச் 26 வரை சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகமும் 14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழாவும் காலை மாலை இருவேளையும் கீழ்கண்ட நிகழ்ச்சி நிழல்படி நடைபெற உள்ளது.

நாளை 23.03.2018 வெள்ளிக் கிழமை காலை 5.30 மணிக்கு மங்கள இசை, 6.00 மணிக்கு சுப்ரபாதம், 6.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு கோ பூஜை, 6.45 மணி முதல் வேத பாராயணம், தேவதா அனுக்யம், மஹா கணபதி பூஜை, 8.00 மணிக்கு 1008 கலசங்களுக்கு சிறப்பு பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா ஆவாஹனம், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், சகல தேவதா ஜபம், 9.00 மணிக்கு தன்வந்திரி மூலமந்திர ஜபம், 10.30 மணிக்கு ஹோமம், 12.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 12.15 மணிக்கு சதுர்வேத பாராயணம், 12.30 மணிக்கு பிரசாத வினியோகம், 1.00 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் தவத்திரு. கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் சக்தி திரு. கோ.ப. அன்பழகன், ஆத்ரேய கோத்திரம் பைரவர் ரமணி அண்ணா அவர்கள், இராணிபேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். அது சமயம் கிராம பொது மக்களும், ஆன்மிக அன்பர்களும், பக்த மஹா ஜனங்களும், பரம பாகவதர்களும் கலந்து கொண்டு மேற்கண்ட தெய்வங்களின் அருள் பெற்று நோயற்ற வாழ்வுடன், குறைவற்ற செல்வத்துடன் கல்வி மேன்மை, வியாபார லாபம், உத்யோக உயர்வு, தொழில் வளர்ச்சி, மழை வளம், விவசாய வளர்ச்சி மற்றும் பதினாறு வகையான ஐஸ்வர்யங்களுடன் சுகானந்த பெருவாழ்வு பெற்று இகபர இன்பம் அடைய எம்பெருமான் ஆலயம் நோக்கி வர வேண்டுமாய் அகங்குளிர அனைவரையும் வருக… வருக… என்று அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சித்ரா பௌர்ணமி - ஜோதிடர் மேள....


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக ஜோதிடர்களின் நலன் கருதி
மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமம் வருகிற
29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு உலக ஜோதிடர்களின் நலனுக்காகவும் ஜோதிடர் குடும்பங்களின் நலனுக்காகவும் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பெருமாளை வேண்டி மாபெரும் தன்வந்திரி ஹோமமும், மஹா சுதர்சன ஹோமமும், மஹாலக்ஷ்மி யாகமும், வாக்தேவி ஹோமமும், அஷட பைரவர் யாகமும், தட்சிணாமூர்த்தி யாகமும் சிறந்த வேதவிற்பனர்களை கொண்டு நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் ஏராளமான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், பட்டு வஸ்திரங்கள், பக்ஷணங்கள் போன்ற பல்வேறு பொருட்கள் சேர்க்கப்படவுள்ளன. ஜோதிடர்கள் இறைவனின் அருளைபெற்று அவ்வப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படும் தோஷங்களை கண்டறிந்து ஜாதகங்களையும், நேரங்களையும்  கணித்து முறையான பலன்கூறி பரிகாரம் செய்வித்து நாடும், மக்களும் சுபிட்சமாக வாழ வழி செய்து வருகிறார்கள். இதில் பராசரர் ஜோதிட முறை, நாடி ஜோதிட முறை என பல்வேறு முறைகளும் வாஸ்து ஜோதிடம், எண் கணித ஜோதிடம், டாரட் ஜோதிடம், கைரேகை ஜோதிடம் என்று பலவகையான ஜோதிட முறைகளை கொண்டு ஜோதிடர்கள் வலம்வந்து நேரம், காலம் பார்க்காமல் பலன் சொல்லி வருகிறார்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் ஆரோக்யத்தையும், தங்கள் குடும்ப நலனையும் கவனித்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அத்தகைய ஜோதிடர்களின் நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள 75 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் பிரார்த்தனை செய்து மேற்கண்ட ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகள் சார்ந்த ஜோதிடர்கள் பங்கேற்று பலன்பெற இசைந்துள்ளார்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,


Wednesday, March 21, 2018

ஏகாதசி - நெல்லிபொடி அபிஷேகம்........


உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல்,  உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள்,  குடல் வாயுவை, எலும்புருக்கி நோய் நீங்கி ஆயுள் பலம் கூட,

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
27.03.2018 ஏகாதசி திதியில் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நெல்லிபொடி அபிஷேகம் நடைபெறுகிறது.


ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் :

நோயில்லாத வாழ்வுக்காக நாம் வழிபட வேண்டிய விசேஷ தெய்வம் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரம். தேவர்களுக்குப பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது அபோது கடலில் இருந்து காமதேனு, ஐராவதம், கௌஸ்துப மணி, மகாலஷ்மி போன்ற மங்கலமான அம்சங்களுடன் தன்வந்திரி பகவானும் அவதரித்தார் என்று புராணங்கள் கூறும். இவர் தன திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே தன்வந்திரி பகவானை மருத்துவத் துறையின் பிதாமகன் என்பர்.

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அவரது பிராச்சத்த்தைப் பெற்று உண்டால் நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. அவருக்கு அபிஷேகம் செய்து அந்தத் தீரித்தத்தை உட்கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேத்த்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி,. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தார் என்கிறது மத்ஸ்ய புராணம். இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருந்துவர் இன்றும் குறிப்பிடுகிறது.இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி செவ்வரியோடிய கண்கள் வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து பரந்த மார்பு பட்டுப் பீதாம்பரம் மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி நான்கு திருக்கரங்கள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து காணப்படுவார். கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும் மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பகவான் அட்டைப் பூச்சிக்கு பதிலாகசீந்தில்என்ற மூலிகைக் கோடியை ஏந்தியபடி காணப்படுகிறார்.துளசி ஆலிலை அரசு இலை வில்வம் விஷ்ணு கிராந்தி நாயுருவி மருக்கொழுந்து பூர்ஜ இலை தேவ தாரு இலை போன்ற இலைகளும் செவ்வந்தி சண்பகம் பிச்சி பாரிஜாதம் தாமரை அரளி புன்னைப்பூ மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான கோதுமை அல்வா அல்லது சுக்குவெல்லம் செய்து தன்வந்திரிக்கு நைவேதிப்பது சிறந்தது!

இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் தன்வந்திரி பகவான். ஒன்றென  ஒருவராக உள் வந்து அமர்ந்தார். இன்று ஓங்கி உயர்ந்த ஒரு பீடத்தையே தனக்கென ஸ்தாபித்துக் கொண்டு விட்டார். தேசமெங்கும் இவருக்கும் பக்தகோடிகள். உலகெங்கிலும் இருந்து இவரை தரிசிக்க அன்பர்கள் தேடி வருகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 27.03.2018 செவ்வாய் கிழமையில் பங்குனி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத பிரசாதம் :
நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,

Tuesday, March 20, 2018

தன்வந்திரி பீடத்தில் 14ஆம் ஆண்டு விழா – சகலமும் தரும் சஹஸ்ர கலசாபிஷேகம்....

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நோய் தீர்க்கும் கடவுளும், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவதாரமான ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, வருகிற 26-03-2018 வரை தன்வந்திரி பீடத்தின் 14ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன், சஹஸ்ர கலசாபிஷேகம் இன்று 20.03.2018 செவ்வாய் கிழமை இரண்டாவது நாள் பூஜைகளும் ஹோமங்களும் நடைபெற்றது.




Monday, March 19, 2018

தன்வந்திரி பீடத்தின் 14ஆம் ஆண்டு விழா......


100 நாட்களாக ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நோய் தீர்க்கும் கடவுளும், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவதாரமான ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு இன்று 19-03-2018 முதல் 26-03-2018 வரை தன்வந்திரி பீடத்தின் 14ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன், சஹஸ்ர கலசாபிஷேகம் முன்னிட்டு சென்ற 06.12.2017 புதன்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆன்று தொடங்கி இன்று 19.03.2018 திங்கட்கிழமை வரை உலக நலன் கருதி 100 நாட்கள் ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று மேற்கண்ட தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேற்காணும் ஐந்து யாகங்களிலும் வைத்து பூஜித்த தன்வந்திரி டாலருடன் ஹோம மஹா பிரசாதம் பெற விரும்புவோர் தன்வந்திரி பீடத்தை தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன்ர்.




யுகாதி 2018...


தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு
(யுகாதி) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு 18.03.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவருக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக யுகாதி பச்சடி செய்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட்டது.

யுகாதி பச்சடி வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.



தன்வந்திரி பீடத்தில் யுகாதி நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 14, 2018

நெல்லிபொடி அபிஷேகம் – தைலாபிஷேகம்….


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மூலவர் தன்வந்திரி - விநாயக தன்வந்திரிக்கு
நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஏகாதசி திதி மற்றும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 13.03.2018 செவ்வாய்கிழமை, 14.03.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெற்றது.

உலக மக்களின் நலன் கருதி நடைபெற்ற இந்த வைபவங்களில் உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகுவதிற்கும் பிரார்த்தனை செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களை, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து ஔஷத பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.