Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 7, 2022

Puratasi 3rd Saturday Special Poojas at Sri Danvantri Arokya Peedam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                   புரட்டாசி 3ம்  சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்,மாவிளக்கு,புஷ்பாஞ்சலி.    ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,   நோய்கள் தீர்த்து காக்கும் மருத்துவக்கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 9 அடி உயரத்தில் , பத்ம பீடத்தில், கையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல் கொடி  ஏந்தியவாறு, நின்ற  நிலையில், மருத்துவர் கோலத்தில்  46 லட்சம் பக்தர்கள் எழுதிய  54 கோடி மந்திரங்களுடன்  பிரதிஷ்டை செய்யப்பட்டு  பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். 

இது தவிர  சைவம், வைணவம், ஸ்ரீசாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என 6 மதங்களுக்குரிய தெய்வங்களும்  தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு  தினந்தோறும் ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

 நாளை 8ம்தேதி  புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி  மூலவர்  ஸ்ரீதன்வந்திரி  பகவானுக்கு  விசேஷ அலங்காரம், அன்னபடையல் வைபவம்,  புஷ்பாஞ்சலி, தீபசேவை, மாவிளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. 

இதில் பக்தர்கள் பங்கேற்று சகலவிதமான தோஷங்கள்,  உடல் பிணி, மனப்பிணி நீங்க ஸ்ரீ தன்வந்திரி பகவானை வழிபட்டு  பயன் பெறலாம்.

 தொடர்ந்து  நாளை மறுநாள் 9ம்தேதி ஞாயிற்றுக்கிழமை  பௌர்ணமியை முன்னிட்டு  ஆண்கள் திருமணத்தடை  நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்யம் பெற  சந்தான கோபால யாகம், 27 நட்சத்திர தாரர்களுக்கான நட்சத்திர சாந்தி ஹோமம்,  ராகு , கேது தோஷங்கள் நீங்கிட  ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், முனீஸ்வரர்  அனுக்கிரஹம் வேண்டி 12 மணிக்கு  சிறப்பு ஹோமம்,  அபிஷேகம், படையல்  ஆகியவையும், மாலை  ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது. 

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  8 அடி உயரத்தில்  சுதை சிற்பமாக ஸ்ரீ லஷ்மி நாராயணர் சுவாமி  பிரதிஷ்டை நடைபெறுகிறது. பிரதிஷ்டா வைபவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகளும்  நடைபெறுகிறது. 


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Wednesday, October 5, 2022

Vidyarampam Poojai and Navarathri 10th day Homam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  6  பூஜைகள்.                                          நவராத்திரி 10ம் நாள் ஹோமம், அபிஷேகம்

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா                             10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இன்று  அக்டோபர் 5ம்தேதி  செவ்வாய்க்கிழமை,  ஸ்ரீ வள்ளலார்  அவதார தினம்,ஸ்ரீ சாய்பாபா  சமாதி தின சிறப்பு பூஜைகளும்,  ஸ்ரீ சுதர்சன ஹோமத்தை ஒட்டி  சுதர்சன ஆழ்வாருக்கு சிறப்பு பூஜை, கல்விக்கடவுள்   ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு  வித்யாரம்ப பூஜைகள், ஸ்ரீமகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு  பூஜை   மற்றும் நவராத்திரி 10ம் நாளை ஒட்டி  ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகைக்கு  சிறப்பு ஹோமம் , அபிஷேகம், பூஜை ஆகியவை  நடைபெற்றது.

 ஹோமம்  மற்றும் பூஜைகளில் உலக நலன் வேண்டியும்,   பக்தர்கள் வாழ்வில் தடைகள் தகர்ந்து அனைத்து வளங்களை பெறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

வித்யாரம்பம்  பூஜைகளில் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர்கள்  தங்களின் பிள்ளைகளுக்கு சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிடைத்து  கல்வியில்  சிறந்து விளங்க   பிரார்த்தனை செய்தனர்.

ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நடைபெற்ற ஆயுத பூஜையில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பூஜைகள் செய்து பிரசாதம்  வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.







Tuesday, October 4, 2022

Sri Vani Saraswathi , Sri Bramma Homams at Sri Danvantri Arokya Peedam

வாலாஜாபேட்டை 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
நவராத்திரி 9ம் நாள் விழா 
ஸ்ரீ  வாணி சரஸ்வதி, 
ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா ஹோமங்கள் 
சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 9ம் நாளான இன்று அக்டோபர் 4ம்தேதி  செவ்வாய்க்கிழமை,  ஸ்ரீவாணி சரஸ்வதி,  ஸ்ரீ வாக் தேவி சமேத சதுர்முக பிரம்மா ஆகிய தெய்வங்களுக்கு   ஹோமங்கள் , சிறப்பு அபிஷேகம்,ஆராதனை ஆகியவை  நடைபெற்றது 

கல்வி  கடவுளான  ஸ்ரீ வாணி சரஸ்வதிக்கும், நம்மை படைக்கும் கடவுளான ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மாவிற்கும் தனி தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது வாலாஜாஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,  நவராத்திரியில் 9ம் நாளான இன்று  ஸ்ரீ வாணி சரஸ்வதிக்கும்,  ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மாவிற்கும்  ஹோமங்கள் நடத்தப்பட்டு , தலை எழுத்தை மாற்றி  நல்வாழ்க்கை வேண்டியும், குழந்தைகள் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்க  வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 






நவராத்திரியில் 10ம் நாளான நாளை 5ம்தேதி ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகைக்கு  ஹோமமும், சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Monday, October 3, 2022

Sri Bala Tiripura sundarai Homam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 8ம் நாள் விழா ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரிக்கு  ஹோமம்சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 8ம் நாளான இன்று அக்டோபர் 3ம்தேதி  திங்கள்கிழமை, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மனுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, குங்கும அர்ச்சனை ஆகியவை  நடைபெற்றது 

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில், 1008 பெண்கள் பங்கேற்று  நடைபெற்ற சுமங்கலி பூஜை  அதை தொடர்ந்து 27க்கும் மேற்பட்ட சாக்த உபாசகர்களால்  நவாபர்ண பூஜை , ஸ்ரீ லலிதா ஹோமம்3 நாட்கள் நடைபெற்று  பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் விக்ரஹம்.

 ஹோமம் மற்றும் அபிஷேகம், பூஜையில் கலந்து கொண்ட  பக்தர்கள், வாழ்க்கையில்  முன்னேற்றத்திற்கு பல்வேறு விதமான திருப்பங்களை தரும் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி அம்மனை வழிபட்டு  பிரசாதங்கள் பெற்று சென்றனர்.  பின்னர் அன்னதானம் நடைபெற்றது. 

பின்னர் அஷ்டமியை  முன்னிட்டு  ஸ்ரீ அஷ்ட பைரவர்களுடன் கூடிய மகா கால பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்  என மொத்தம்  10 பைரவர்களுக்கும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

 நவராத்திரியில் 9ம் நாளான நாளை 4ம்தேதி ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா  ஆகிய தெய்வங்களுக்கு  ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Sunday, October 2, 2022

Sri Sarabeswarar Poojai at Sri Danvantri Arokya Peedam

 


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்   ராகுகாலத்தில் 

ஸ்ரீசரபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம்


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி இன்று   2.10.2022 ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை  4.30--&6.00  ராகுகாலத்தில் , ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ,4 அடிஅகலத்தில்  விசேஷமான முறையில்  அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு  சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு  அபிஷேக பூஜை நடைபெற்றது. 

 இந்த யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக  பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு சகலவிதமான பிரச்சனைகளும் நீங்கி தேவைகள் பூர்த்தியடைய  ஸ்ரீ சரபேஸ்வரரை  தீபம் ஏற்றி  வணங்கி  வழிபாடு நடத்தினர்.




இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Sri Rajamathangi Homam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 7ம் நாள் விழா ஸ்ரீ அஷ்டபுஜ மரகத  ராஜமாதங்கிக்கு ஹோமம்சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 7ம் நாளான இன்று அக்டோபர் 2ம்தேதி  ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ  அஷ்டபுஜ மரகத  ராஜமாதங்கி அம்மனுக்கு  ஹோமமும் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .

கல்வி, கேள்வி, பக்தி, வைராக்கியம் போன்ற 64 விதமான கலைகளுக்கு  அதிபதியான சரஸ்வதிக்கும், பிரம்மாவிற்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேலும் ஒரு சிறப்பாக  ராஜயோகத்தையும், அரசு பதவிகளில் வெற்றியையும் , தேர்வுகளில் அதிக மதிப்பெண்களையும் பெற ஆசிர்வதித்து, அருள் வழங்கும் ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜ மாதங்கிக்கும் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீஅஷ்டபுஜ மரகத ராஜமாதங்கியை  தமி-ழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா  உள்பட பல்வேறு  மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு பயனடைந்து வருகின்றனர்.

தேவி ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கியின் அருள் வேண்டி ஹோமத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. 

ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

 நவராத்திரியில் 8ம் நாளான நாளை 3ம்தேதி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி  ஹோமம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.





Saturday, October 1, 2022

Sri Vasavi Kannika Parameswari Homam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நவராத்திரி 6ம் நாள் விழா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ தாய் மூகாம்பிகைஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் பூஜைகள்.


வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 6ம் நாளான இன்று 1ம்தேதி  சனிக்கிழமை ஸ்ரீ வாசவி கன்னிகா  பரமேஸ்வரி, ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு  ஹோமங்களும், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு  சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .

ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குல தெய்வமாகவும், வாழ்க்கையில் பல்வேறு தடைகளை நீக்கி  வசந்த வாழ்வை தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு  உலகில்  முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது . இங்கு  ஆர்ய  வைஸ்ய சமூகத்தினர் தங்களது குடும்பத்தினரின் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்,  பீமரதசாந்தி போன்ற  விசேஷங்களை நடத்தி, அன்னையை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.

விரைவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகையின்  சன்னதி நல்ல முறையில் அமைய வேண்டி ஹோமத்தில்  பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

 நவராத்திரியில் 7ம் நாளான நாளை 2ம்தேதி ஸ்ரீ அஷ்ட புஜ மரகத ராஜமாதங்கி ஹோமம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.






இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.