Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 5, 2022

maragatheeswarar 1008 Kalasa abishegam at Danvantri Arokya Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ  மரகதேஸ்வரருக்கு 1008 கலச அபிஷேகம்

 வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,   உடல் நோய், மன நோய் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இன்று  5.9.2022ம்தேதி  திங்கள்கிழமை ம்ருத்யுஞ்சய ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் மற்றும் மகா கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

முன்னதாக  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 1008 கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்  தங்களின் உடல்  நோய் மற்றும் மன நிம்மதி வேண்டி  வழிபட்டனர். 

ஹோமம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ  முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும் , ஆசியும் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.





Sunday, September 4, 2022

Sri Sarabeswarar Special Homam and Abishegam at Danvantri Arokya Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்   ராகுகாலத்தில் 

ஸ்ரீசரபேஸ்வரர் சிறப்பு அபிஷேகம்


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி இன்று   4ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை  4.30-6.00  ராகுகாலத்தில் , ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ,                                 4 அடிஅகலத்தில்  விசேஷமான முறையில்  அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு  நடைபெற்ற சரபேஸ்வரர் யாகம் மற்றும் பூஜையில்  பக்தர்கள் கலந்து கொண்டு  சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

இந்த யாகத்தில்  நெய், தேன், நவசமித்துகள், விசேஷ மூலிகைகள், மஞ்சள், பூசனிக்காய், பழங்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள் மற்றும் ஏராளமான விசேஷ திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்று, பால், தயிர் , சந்தனம் , பன்னீர், மஞ்சள், விபூதி  போன்ற பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. 

சரபேஸ்வரர் வழிபாட்டின் சிறப்பு 

 சரபேஸ்வரர் வழிபாட்டின் மூலம் எதிர்ப்புகள்  நீங்கும் ,  இன்னல்கள் போக்கும், கஷ்டங்கள் விலகும்,  கழுத்தை நெறிக்கும்  

கடன் பிரச்சனைகள் தீரும்,  செய்வினை கோளாறுகள்  , தீராத நோய்கள் , ஜாதகத்தில் ஏற்படும் கர்ம வினைகள் , நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், குடும்ப பிரச்சனைகள் , தொழில் வருமான தடைகள்  போன்றவைகள் எல்லாம் நீங்கி  நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில், நரசிம்மர் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமானதோ  அதே போல்  சரபேஸ்வரர் வழிபாடும் மிகவும் சிறப்பானது என  பக்தர்கள்  வழிபட்டு வருகின்றனர்.

மேற்கண்ட  சிறப்பு பூஜைகள் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆசியுடன்  நடைபெற்றது. 

 ஸ்ரீசரபேஸ்வரர்  யாகம் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Saturday, September 3, 2022

Danvantri Arokya peedam Taken ISO CERTIFICATES FOR 4 th times




  

 வாலாஜாபேட்டை 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு 4 வது முறையாக 
சர்வதேச தரச்சான்றிதழ் 

 வாலாஜாப்பேட்டை அடுத்த  அனந்தலை பஞ்சாயத்திற்குட்பட்ட , கீழ்புதுப்பேட்டையில் 
 உலக மக்களின் நோய் தீர்க்கும் பீடமாகவும், ஷன்மத பீடமாகவும் 
தீகழ்ந்து வரும்  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் கடந்த  2009 ம் வருடம் முதல்  சிறந்த பராமரிப்பிற்காகவும் , சுற்றுப்புறச்சூழலுக்காக சர்வதேச தரச்சான்றிதழ்  பெற்று  சிறந்த முறையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்  பராமரிக்கப்பட்டு  வருகிறது. 

அந்த வகையில் இன்று  3.9.2022   சிறந்த பராமரிப்புக்கான  ஐ.எஸ்.ஓ 9001 : 2015 சான்றிதழ்  மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ 14001 : 2015  ஆகிய இரு சேவைகளுக்காக  சர்வதேச தரச்சான்றிதழ் ,பி.எம்.க்யூ.ஆர்.  நிறுவனத்தின் மூலம்  ஸ்ரீதன்வந்திரி பீடத்தின்  பீடாதிபதி  யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் வழங்கப்பட்டது. 

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொடர்ந்து 4 வது முறையாக மேற்கண்ட ஐ.எஸ்.ஓ . தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது  ஆகும்.

Astami Bairavar Homam and Boojai on 3.9.2022 at Danvantripeedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

அஷ்டமி திதியை முன்னிட்டு அஷ்ட பைரவர்  சிறப்பு  ஹோமம், அபிஷேகம் 


இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , இன்று 3.9.2022 சனிக்கிழமை  வளர்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது.


 உலகிலேயே  ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்  மட்டுமே  அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,  குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் , சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுடன்  மகா கால பைரவர், மற்றும்  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்  என 10 பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பாகும் . மேற்கண்ட பைரவர்களை  வழிபடும் விதத்திலும் அருள்பெறும் விதத்திலும்  இன்று   

10 கலசங்கள் வைத்து  சிறப்பு யாகம், பூஜைகள்  நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் வெளிநாடு செல்வதற்கு ஏற்படும் தடைகள் நீங்கி வெளிநாடு செல்லவும்,  சகலவிதமான தோஷங்கள்,  பாவங்கள் நீங்கிடவும், தடைப்பட்ட காரியங்களில் வெற்றி பெற்றிடவும், நலமான வாழ்வு  அமைந்திடவும்  பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

நிறைவாக  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள  ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கும் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற பொருள்களுடன் அஷ்ட திரவிய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.

ஹோமம் மற்றும்  பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் கூஷ்மாண்ட தீபம் (பூசணிக்காய்)  ஏற்றி பைரவர்களை வணங்கி சென்றனர்.

பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


Friday, September 2, 2022

Sathru samhara homam on 2.9.2022 at Sri Danvantri arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஷஷ்டி திதியை முன்னிட்டு  சத்ரு சம்ஹார ஹோமம்




 இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , இன்று 2.9.2022 வெள்ளிக்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை சத்ரு சம்ஹார ஹோமமும், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண், பெண்கள் வாழ்கை மலரவும், குழந்தை பாக்யம் வேண்டியும், பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கும், எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை வெல்லவும், சத்ரு ஜெயம், தீர்க்க ஆயுள், ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம்  பெற்று நிவாரணம் கிடைக்கவும், கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லவும் பக்தர்கள் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை செய்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

நிறைவாக  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீகார்த்திகை குமரனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி, போன்ற பொருள்களுடன் அஷ்ட திரவ்ய அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.

 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Thursday, September 1, 2022

Panchamuga Vaarahi special Homam on Danvantri Peedam at 1.9.2022

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  இன்று 

பஞ்சமுஹ வராஹி அம்மனுக்கு சிறப்பு  ஹோமம் மற்றும் அபிஷேகம் 

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,இன்று 1.9.2022 வியாழக்கிழமை  பஞ்சமி திதியை முன்னிட்டு  பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வராஹி, காளி, சூலினி, திரிபுர, பைரவி என 5 முகங்களுடன்  காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு  பிரதி பஞ்சமி திதி  தோறும் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.

இன்றும் மாலையில்  பஞ்சமி திதியை  முன்னிட்டு   ஸ்ரீ  பஞ்சமுக வராஹி அம்மனுக்கு  சிறப்பு  வராஹி ஹோமமும், அம்மனுக்கு  அபிஷேகம்  செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  

 ஹோமம்  மற்றும்  சிறப்பு பூஜைகளில் கலந்து  கொண்ட  பக்தர்கள்  விவசாய நிலங்களில்  விளைச்சல் பெருக,  காரிய தடைகள் விலக,  தோஷங்களிலிருந்து விடுபட, குடும்ப நிம்மதி  போன்றவை  உள்பட பல்வேறு  வேண்டுதல்களுக்காக வராஹி அம்மனை வணங்கி  தேங்காயில்  நெய் வீட்டு  தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். 




இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 

vinayagar chathurthi special 48 mega Ganapathi Homams on Danvantri Peedam