Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 23, 2022

SPECIAL THIRUMANJANAM TO SRI DANVANTRI BAGHAVAN BEGINS ON 24.04.2022 TILL 26.05.2022 @ SRI DANVANTRI AROGYA PEEDAM

 அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நாள் 24.4.2022 முதல் 26.05.2022 வரை நடைபெறுகிறது

https://tamil.oneindia.com/astrology/agni-nachatram-special-tirumanjanam-festival-to-lord-sri-dhanvanthri-455506.html


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 26.05.2022 வியாழக்கிழமை வரை 33 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26.05.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம். 

தொடர்புக்கு 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, 
வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். 
தொலைபேசி : 04172 - 294022, செல் – 94433 30203

26 TH GURU POOJA ON CHITRA POURNAMI AT SRI DANVANTRI AROGYA PEEDAM

         16.04.2022 சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய             பீடத்தில் 26-ஆம் ஆண்டு குரு பூஜையுடன் மஹேஸ்வர பூஜையும் 468                                                         சித்தர்கள் யாகமும் நடைபெற்றது.

https://righttimerightnews.blogspot.com/2022/04/blog-post_517.html



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன் இன்று 16.4.2022, சனிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 468 சித்தர்கள் யாகம், ஸ்ரீ சத்யநாராயண ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், சனி சாந்தி ஹோமம் மற்றும் 26 ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜை குரு பூஜையும் ஸ்வாமிகள் ஆசிளுடன் அனைத்து ஐஸ்வர்யங்கள் உட்பட எல்லா நலன்களும் பெறவும் குடும்பத்தில் அந்நியோன்னியம், பணியில் எதிர்பார்க்கின்ற நல்மாற்றம், திருமணம் போன்ற சுப வைபவங்கள், குடும்பத்தில் ஒற்றுமை, தொழிலில் அபிவிருத்தி, குழந்தை பாக்யம், போன்றவை உட்பட அனைத்தும் கிடைக்கவும் நடைபெற்றது. பூஜையும் ஹோமங்களும் பூர்த்தி ஆன பின் 468 சித்தர்களுக்கு கலசங்கள் கொண்டு பக்தர்களின் திருக்கரங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்வாமிகளின் குருவும் பெற்றோர்களும் ஆன தந்தை ஸ்ரீமான் K.B. ஸ்ரீநிவாசன், தாய் ஸ்ரீமதி கோமளவல்லி அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மகா அபிஷேகமும் சப்தரிஷி பூஜையும் மற்றும் இராகு-கேது அன்னாபிஷேகம் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் எண்ணற்ற சாதுக்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

                                    

                       






THEERTHAKULAM VELLOTTAM AT SRI DANVANTRI AROGYA PEEDAM ON 11.04.2022

                                             


                                     ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதிய                                                            தீர்த்தகுளம்  வெள்ளோட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி 11.04.2022 திங்கட்கிழமை மங்கள சண்டி யாகம், வருண ஜப யாகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்டு வருகின்ற  ஸ்ரீ தன்வந்திரி தீர்த்த குளத்திற்கு தண்ணீர் நிரப்புதல் பூஜை நடைபெற்றது.

    







விரைவில் தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவினி தீர்த்த குளம் திறப்பு.

50 அடி நீளம், 50 அடி அகலம் 13 அடி ஆழத்தில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது, நடுவில் 6 x13 என்ற அளவில் நீராழி மண்டபம் அமைத்து தண்ணீர் நிரப்புதல் பூஜை செய்யப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு.தெ. பாஸ்கர பாண்டியன் குடும்பத்துடன் கலந்து கொண்டு கங்கா பூஜை செய்தனர். முதலில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் பூஜை,  ஸ்ரீ துர்கா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமிகள் ஆசிபெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Monday, April 11, 2022

THANKS TO DINAMANI SRI RAMA NAVAMI @ SRI DANVANTRI AROGYA PEEDAM

                   ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 

                           சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் 

                           ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றது   

       


                               





இராணிப்பேடை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஸ்ரீ ராமநவமி முன்னிட்டு இன்று 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கூட்டு பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதில் பானகம், நீர் மோர், வட பருப்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

THANKS TO DINAMANI

SPECIAL HOMAM AND ABISHEKAM TO SRI PATTABISHEKA RAMAR ON THE OCCASION OF SRI RAMA NAVAMI ON 10.04.2022

                     ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு 

                                        சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்         


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நாளை 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஹோமம், அபிஷேகம், பாராயணம், அர்ச்சனை, மஹாதீபாராதனை போன்றவைகள் இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனமும் இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனையும் மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது

இந்நாளில் ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறலாம் என்பது ஐதீகம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

--

Wednesday, April 6, 2022

ANNAPPADAIYAL VAIBHAVAM TO SRI ANNAPOORANI DEVI @ SRI DANVANTRI AROGYA PEEDAM

                 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அன்னபூரணி தேவிக்கு                                                                 அன்னப்படையல் வைபவம்



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள தங்க அன்னபூரணி தேவிக்கு பிரதி மாதம் பௌர்ணமி, அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அன்னப்பூரணி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி வருகிற 5.4.2022, செவ்வாய்கிழமை காலை 11.00 மணி அளவில் அன்னபூரணி ஹோமமும், அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் செய்து சாதம், பருப்பு, நெய், பாயாசம், வடை, அப்பளம் போன்ற 60 வகையான உணவுப்பொருட்களை கொண்டு அன்னபூரணி தேவிக்கு அன்னப்படையல் வைபவமாக அன்னபூரணி சன்னதியில் நடைபெற உள்ளது.

மேற்படி பூஜைகள் குடும்பத்தில் பசி, பட்டினி, நோய், வறுமை மற்றும் தரித்திரம் நீங்கவும், விவசாயம் வளர்ச்சி பெறவும், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள் ஆரோக்யமாக வாழவும், பொருளாதார நிலை மேம்படவும், அன்னதோஷம் விலகவும் உணவு தோஷத்தினால் ஏற்படும் நோய்கள் விலகவும், துன்பங்கள் நீங்கவும். உண்ணும் உணவிற்கு தேவியாக இருக்கும் அன்னபூரணியை வேண்டி உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், ஆண், பெண் திருமணம் தடைகள் நீங்கவும் அன்னப்படையல் வைபவம் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

16 PILLARS MANDAPAM INAUGURATION IN SRI VASAVI KANNIKA PARAMESWARI TEMPLE @ DANVANTRI AROGYA PEEDAM

                                           16 கால் மண்டம் திறப்பு விழா

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் 16 கால் மண்டம் திறப்பு விழா நேற்று 3.4.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24.06.2010 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவிக்கு ஆலயம் அமைத்து விக்கிரகம் பிரதிஷ்டை ஏராளமான ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்கள் வேண்டுகோள் ஏற்று ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 10.07.2015-ம் ஆண்டு தமிழக முன்னாள் ஆளுநர் K.ரோசய்யா அவர்களின் திருக்கரங்களால் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எனும் அடிக்கல் நாட்டு விழா முக்கியஸ்தர்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேற்கண்ட திருப்பணி 16 கால் கொண்டு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று 3.4.2022, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் திரு P.சேஷாத்திரி, GENERAL SECRETARY, INTERNATIONAL VAISH FEDERATION, TAMIL NADU & SOUTHERN INDIA VYSYA ASSOCIATION, திரு. நாராயண குப்தா, முன்னாள் தலைவர், ஆர்ய வைஸ்ய மஹா சபா, சென்னை, திரு. சந்திரசேகர். விவேக் & கோ உரிமையாளர், சென்னை, திரு. காடி P.சீனிவாஸ், பெங்களூர், திரு சங்கமேஸ்வரன், பெங்களூர், திரு கணேஷ், திருச்சி, திரு புருஷோத்தமன், கரூர், திரு, முருகானந்தம், கரூர், திரு ராஜசேகர், ஊட்டி போன்ற 30க்கு மேற்பட்ட தொழிலதிபர்களும் ஆர்ய வைஸ்ய குடும்பத்தினர்களும் தன்வந்திரி பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுடன் புது கணக்கு துவங்க ஸ்ரீ லக்ஷ்மி குபேர சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும்  தன்வந்திரி பிரசாதத்துடன் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.