Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 6, 2016

தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்க்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 04.10.2016 மற்றும் 05.10.2016. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் பலன் தரும் 16 ஹோமங்கள் நடைபெற்றது.

சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கார்த்தவீர்யாஜுனர் ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், கால பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், சத்யநாராயணர் ஹோமம், லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், குபேர லஷ்மி ஹோமம், பூ சூக்த ஹோமம், லஷ்மி நாராயணர் ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஹோமம், தன்வந்திரி ஹோமம், த்ருஷ்டி துர்கா ஹோமம் ஆகிய  சிறப்பு ஹோமங்கள் மாபெரும் வகையில் 04.10.2016 மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 05.10.2016 மாலை 108 லட்டுக்கள், பல வகையான புஷ்பங்கள், சமித்துக்கள், நெய், சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டு வஸ்திரங்கள், பல வகையான பழங்கள், பல வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட்டு, பூர்ணாகூதியுடன் நிறைவு பெற்றது. இந்த ஹோமத்தின் சிறப்பு அம்சமான 10 பைரவர் ஹோமங்கள் 10 குண்டங்கள் அமைத்து, 10 சிவாச்சார்யார்கள்  அமர்ந்து ஹோமங்கள் செய்து, அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், ஆராதனைகளுடன் யாகத்திருவிழா சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த ஹோமத்தில், ஏராளமன பக்தர்கள் பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான    ஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளையும், ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசியையும் பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274   (M) 9443330203 | Mail: danvantripeedam@gmail.com  








Wednesday, October 5, 2016

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வள்ளலார் ஜெயந்தி விழா

எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயில்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்ற வள்ளாலாரின் வாக்குப்படி, உலக நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளும் இன்புற்றிருக்கவும், வாழ்வில் சிறக்கவும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், புதன் கிழமை 05.10.2016 இன்று வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமமும், வள்ளலார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், அன்னதானமும் நடைபெற்றது.
மேலும், சென்னையை சேர்ந்த திரு. கணேசன் கமலா தம்பதியினர் வஸ்திர தானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வள்ளலாரிடம் ப்ரார்த்தனை செய்து, ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்றுச் சென்றனர் என்பதனை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Tuesday, October 4, 2016

தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு தன்வந்திரி பீடாதிபதி வரவேற்பு.

தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மனையின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

பக்க விளைவுகள் இல்லாத இந்த அயுர்வேத மருத்துவ சிகிச்சை மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று வருகிறது. பாமரர்கள் முதல் செல்வந்தர்கள் வரை ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறி வருகின்றனர். ஆங்கில மருத்துவம் போன்றே இங்கும் பல்வேறு நோய் சிகிச்சை பிரிவுகள் உள்ளது. பக்க விளைவுகள் கிடையாது என்பதுடன் சில நோய்களுக்கு பிற மருத்துவத்தில் இல்லாத சிகிச்சை கூட ஆயுர்வேதத்தில் உள்ளதால் இம்மருத்துவ முறைக்கு மாறி வரும் நோயாளிகளின் என்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம்.


மத்திய, மாநில அரசுகள் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும்  அரசு வேலை வாய்ப்பு, முதுகலை படிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தருவதுடன், இதற்காக சர்வதேச தினம் கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிசீலணை செய்து, ஆயுர் வேத மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சர்வதேச ஆயுர்வேத தின கொண்டாட்டம் பெருமளவில் வெற்றி பெற பீடத்தின் சார்பாக, இந்த வருடம் முதல் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்

Monday, October 3, 2016

தன்வந்திரி பீடத்தில் பலன் தரும் 16 ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும், சுமங்களிகளின் தீர்காயுள் வேண்டியும், லஷ்மி, சரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 04.10.2016 மற்றும் 

05.10.2016. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள்.
சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், கார்த்தவீர்யாஜுனர் ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், கால பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், குபேர லஷ்மி ஹோமம், பூ சூக்த ஹோமம், லஷ்மி நாராயணர் ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், தன்வந்திரி ஹோமம், த்ருஷ்டி துர்கா ஹோமம் ஆகிய  சிறப்பு ஹோமங்கள் மாபெரும் வகையில் நடைபெற உள்ளது.

04.10.2016 மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் இந்த ஹோமங்கள், 05.10.2016 மாலை பூர்ணாகூதியுடன் நிறைவு பெறும். இந்த ஹோமத்தின் சிறப்பு அம்சமான 10 பைரவர் ஹோமங்கள் 10 குண்டங்கள் அமைத்து, 10 சிவாச்சார்யார்கள்  அமர்ந்து ஹோமங்கள் செய்ய உள்ளார்கள். ஹோமங்களை தொடர்ந்து, அதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும்.

இந்த ஹோமத்தில், 108 லட்டுக்கள், 108 வகையான புஷ்பங்கள், சமித்துக்கள், நெய், சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டு வஸ்திரங்கள், பல வகையான பழங்கள், பல வகையான இனிப்புகள், கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. நடக்க இருக்கும் இந்த ஹோமத்தில், பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளுடன் பதினாறும் பெற்று நோயின்றி,  சீறும், சிறப்புமாக வாழ வேண்டுமாய் கோருகிறோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:

ஸ்ரீ தன்வந்திரி பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274   (M) 9443330203
Mail: danvantripeedam@gmail.com

  

தன்வந்திரி பீடத்தில் முத்தான மூன்று ஹோமங்கள்


தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்


Sunday, October 2, 2016

தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி ஆரம்பத்தை முன்னிட்டு 02.10.2016  ஞாயிற்று கிழமைபீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில்:
1.   கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்
2.   பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்
3.   ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்
4.   நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்
5.   வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்

ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களும் ஐந்து விதமான ஹோம குண்டங்களில், ஐந்து அர்ச்சகர்கள் அமர்ந்து செய்தனர். இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், சிறப்பு அர்ச்சனையும், நவராத்திரி ப்ரார்த்தனையும் நடைபெற்றது.  இதில் மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டினர். மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.