தன்வந்திரி பீடத்தில் வராகி நவராத்திரி
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சமுக (காளி, சூலினி, வராகி, திரிபுர பைரவி, பகுளாமுகி) வராகி ஆலயத்தில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி எனும் வராகி நவராத்திரி வைபவம் இன்று கோலாகலமாக துவங்கியது. இன்று முதல் வருகிற 19.07.2021 தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வராகியை வேண்டி அபிஷேகம், ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, விஷேச அலங்காரம், 108 நெய் தீபம் மற்றும் ஆராதனைகள் பஞ்சமியை முன்னிட்டு நடைபெறுகிறது.
இன்று காலை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது இதில் துர்கா ஹோமம், பாலா ஹோமம், வாசவி ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், அன்னபூரணி ஹோமம், காயத்ரி ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், ஆரோக்கிய லஷ்மி ஹோமம் மற்றும் வராகி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கருணைக்கிழங்கு, வள்ளி கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்களுடன் நாயுருவி, மஞ்சள், குங்குமம், தாமரைப்பூ, தாமரை விதை, நவதானியங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் பஞ்சமுக வராகி தேவிக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சென்னை, கே.கே. நகர், ESI மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சௌமியா சம்பத் மற்றும் டாக்டர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாளை காலை இரண்டாவது நாள் பூஜைகள் காலை 7 மணிக்கு துவங்கப்படுகிறது.
வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று உலகத்தில் எதிரிகள் இல்லை என்பர். பஞ்சமி என்பது வாராஹியை குறிக்கும் பெயர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகத்தால் எனும் ஐந்தொழில்களில் அனுக்ரஹமே வாராஹியின் தொழில். வாராஹியை நினைத்து விரதம் இருந்தால் வளமையும், செழுமையும், வெற்றியும் மற்றும் மகிழ்ச்சியும் நம்மை வந்து சேரும்.
ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி)
இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)
மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)
நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)
ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)
ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி - சாமுண்டா)
ஏழாம் நாள் சாகம்பரி தேவி
எட்டாம் நாள் வராஹி தேவி
ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி போற்றி பூஜைகள், ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது.
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.
சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும்.
இந்தியாவில் பஞ்சமுக வராகியாக தன்வந்திரி பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படை தளபதி ஆவாள். எந்தச் செயல் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவது மிகவும் சிறப்பு என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வெற்றி தெய்வமாகத் திகழும் வராகியை பஞ்சமி நாளில் வழிபட்டு வாழ்க்கையில் பலவிதமான பலன்களை பெற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தங்களை அன்புடன் அழைக்கிறது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மரகதேஸ்வரருக்கு வலது புறத்தில் தனி ஆலயம் அமைத்து கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த சன்னதியில் என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமண வரம் உடனே கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. பூமி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இவளிடம் வேண்டிக் கொண்டால் உடனடி நன்மை கிடைக்கிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன என்கின்றனர் வருகை புரியும் பக்தர்கள்.
வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படை தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும். இவளுக்கு பல நாமங்கள் உள்ளன. சேனநாதா, தண்டநாதா, வாராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி (வடிவம்), பலி தேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னி, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரியை. இந்த தேவியே பகளாமுகி என்றும் அழைப்பர்.
வாராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வாராஹி, அஷ்வாரூட வாராஹி, ஆதி வாராஹி, லகு வாராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வாராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்கள். வாராஹம் என்றால் என்ன? பன்றி தானே, வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வாராஹி தான். என்ன உதவி தெரியுமா? பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கி நுனியில் (அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி) வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை (இயற்கையை) மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வாராஹி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.
வராகி கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும் (ஏர்) மற்றும் தண்டம்? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் (ஆழத்தில்) இருப்பதை எடுப்பதற்கு தானே, கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்) என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை
வராகியை நம்பிக்கையுடன் வழிபடுவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் (வாராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்), எதிரிகள் குறைவார்கள் (அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வாராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது) ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது
வாராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்
இப்படி வாராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் ஒரு விஷயம் வாராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வராகி தேவியை வராகி நவராத்திரியில் வழிபட்டு நன்மை பெற பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்தில் பலவகையான கிழங்குகள், பட்டு புடவைகள், நெய், தேன், பற்படாகம், விலை உயர்ந்த மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளது. ஒன்பது நாட்களும் 9 வகையான அலங்காரம், 9 வகையான நெய்வேத்தியம், 9 வகையான புஷ்பங்கள், 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை, 108 நெய் தீபம், புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,
இராணிபேட்டை மாவட்டம்,
தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.
No comments:
Post a Comment