Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, July 1, 2021

ASHTAMI HOMAM FOR ASHTA BAIRAVAR ON 02/06/2021

 அஷ்டமியில் அளவில்லா அருளுடன் பொருள் தரும் அஷ்ட பைரவர் யாகம்

                           02.07.2021, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 02.07.2021 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் (சொர்ணாகர்ஷண பைரவர்) யாகமும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை எட்டு திக்கு காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் மஹா கால பைரவர் யாகம், அஷ்ட மாத்ருகா பூஜையும் நடைபெறுகிறது.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்ட பைரவர்கள்:

ஆனி தேய்பிறை அஷ்டமி: கால பைரவரை வழிபட கண் திருஷ்டி, நோய்கள் நீங்கும் தடைகள் விலகும் மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள். அஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அசிதாங்க பைரவர்:

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்:

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்:

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்:

குரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்:

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வாராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீஷண பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்:

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டி தேவி விளங்குகிறாள்.

எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு:

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

பணம் தரும் பைரவர் - சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு:

ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

தொடர்புக்கு: 9443330203

கயிலை ஞானகுரு டாக்டர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

தன்வந்திரி நகர்,அனந்தலை மதுரா,கீழ்புதுபேட்டை,

வாலாஜாபேட்டை


No comments:

Post a Comment