ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரி வைபவம்
1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞனாகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி 10.07.2021, சனிக்கிழமை முதல் 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி அம்மன் சன்னதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று 10.07.2021 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு ஹோமம் மற்றும் பூஜைகள் சிறப்புடன் தொடங்கியது.
மேலும் தொடர்பு கொள்ள முகவரி
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,
இராணிபேட்டை மாவட்டம்,
தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.
No comments:
Post a Comment