Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 19, 2021

ASHADA NAVARATHRI HOMAM FOR GODDESS VARAHI

      அன்னை வாராகிக்கு  ஆஷாட நவராத்திரியை     முன்னிட்டு சிறப்பு  ஹோமம் , அபிஷேகம் மற்றும்                                  சகஸ்ரநாம  அர்ச்சனை

ஆஷாட நவராத்திரியில் அன்னை வாராஹிக்கு 1000 தாமரை மலர்கள், 1000 தீபங்கள் கொண்டு சிறப்பு வழிபாடு  09.07.2021 முதல் 19.07.2021 வரை நடைபெற்றது.

1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 10.07.2021, சனிக்கிழமை முதல் 19.07.2021, திங்கட்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி சந்நதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ சாக்த வழிபாடு அம்பிகையை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவதாகும். ஆதி அன்னையே சகல சக்தியாகவும் திகழ்ந்து சகல உலகங்களையும் காப்பவள். தேவி வழிபாடுகளில் நவராத்திரி மிகவும் முக்கியமானது. பொதுவாக நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் ஆயுதபூஜைக் காலமான மகாநவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். காலப் போக்கில் அந்த வழக்கம் குறைந்து முக்கியமான நான்கு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கமே உள்ளது.

நான்கு நவராத்திரிகள்

 ஆனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள்  “ஆஷாட நவராத்திரி” என்றும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் “சாரதா நவராத்திரி” என்றும் தை மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் “சியாமளா நவராத்திரி” எனும் “மகா நவராத்திரி” என்றும் பங்குனி மாதம்  அமாவாசைக்கு பின் வரும்  9 நாட்கள் `வசந்த நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகின்றன.

வாராஹியின் சிறப்புகள்

வாராகியின் இருசெவிகள் கோமளமாகவும் திருவடிகள் புஷ்பராகமாகவும் இரண்டு கண்கள் நீல கல்லாகவும், கரங்கள் கோமேதகமாகவும், நகம் வைரமாகவும், சிரிப்பு முத்து ஆகவும், பவளம் இதழாகவும், திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போன்றதாகவும் போற்றப்படுகிறது. வாராஹி வாலை திரிபுர சுந்தரியாக இருந்து நமக்கு அட்டமா சித்திகளை வழங்குகிறாள். வாராஹி தீயவைகளையும், எதிரிகளின் தொல்லைகளையும், துன்புறுத்தல்களும் அழித்து நம்மை காப்பவள். பக்தரைக் காக்கும் பேரரணாக இருப்பவள் வாராஹி. மனதில் ஏற்படும் பயத்தை போக்குபவளும், பகைமை நீக்குபவளும் வாராஹி. நோய்களை தீர்த்து உடல்நலத்தை தருபவள் வாராஹி.

வார்த்தாளி – வாராஹி – ஆஷாட நவராத்திரி

 ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் ஆஷாட நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வார்த்தாளி என்கிற வாராஹி அம்மன் ஆகும்.

வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே ஆனி - ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி அம்மன். அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் அதனால்தான் தன்வந்திரி பீடத்தில் விவசாய பெருமக்களுக்காகவும், உழவுதொழிலை மேம்படுத்தவும், இயற்கை வளங்கள் சுபிச்சைமாக இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக (காளி, வாராஹி, சூலினி, திரிபுர பைரவி, பகளாமுகி) வாராஹிக்கு ஆலயம் அமைத்து அவ்வப்பொழுது வாராஹி ஹோமங்களும், சக்தி ஹோமங்களும் பஞ்சமி மற்றும் அஷ்டமி நாட்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று வருகிறது. இங்கு பிரதி பஞ்சமி நாட்களிலும் ஆஷாட நவராத்திரி தினங்களிலும் வாராஹிக்கு சிறப்பு பூஜைகள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

 பஞ்சம் போக்கும் பஞ்சமி

 ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள் கொள்ளலாம். தானியங்கள் கொண்டு அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

 பயங்களைப் போக்கி வெற்றியைத் தருபவள் வாராஹி

 சதுரங்க சேனா நாயிகா’ என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். `வாராஹிகாரனிடம் வாதாடாதே’ என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

 பஞ்சமி அன்று வாராஹி நாமத்தை சொல்லி பிரார்த்தனை செய்து வந்தால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

 ஸ்ரீ வராஹி தேவிக்கு பிரியமான பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர் சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் கலந்த சாதங்கள் தன்வந்திரி பீடத்தில் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

 பிலவ ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி  10.07.2021, சனிக்கிழமை அன்று தொடங்கி 19.07.2021, திங்கட்கிழமை வரை நடைபெறுகிறது. 14.7.2021 அன்று பஞ்சமி திதி முன்னிட்டு அன்னை வாராஹிக்கு 1000 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்நாளில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னை வாராஹி தேவியை வழிபட்டு. நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி செல்வ வளங்களுடன் இன்பங்கள் பெற பிரார்த்திப்போம் பஞ்சமுக வாராஹியை என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

 வார்த்தாளி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி களில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரியா சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

 வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

 ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

 முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி), இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி), மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி), நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி), ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி), ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா), ஏழாம் நாள் சாகம்பரி தேவி, எட்டாம் நாள் வராஹி தேவி, ஒன்பதாம்  நாள்  லலிதா பரமேஸ்வரி அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் வாராஹி ஹோமம், வாராஹி அபிஷேகம் பல்வேறு மலர்களால் பூஷ்பாஞ்சலி எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற உள்ளது. ஆஷாட நவராத்திரியில் அன்னை பராசக்தியை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம் என்கிறார்     ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

93 days starting from Wednesday the 24th March 2021 to 24th June 2021 (Daily from 8.30 am to 12.30 pm)


Monday, July 12, 2021

Ashada navarathri for Panchamuga Varahi Second day homam 10/7/21

ஆஷாட நவராத்திரி இரண்டாம் நாள் விஷேச பூஜை

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு விஷேச ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் 09.07.2021 முதல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான 10.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை  ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி) க்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை , 108 நெய் தீபம், மற்றும் ஹோமம் நடைபெற்றது.

     



 

Sunday, July 11, 2021

VARAHI NAVARATHRI @ DANVANTRI AROGYA PEEDAM

 தன்வந்திரி பீடத்தில் வராகி நவராத்திரி

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சமுக (காளி, சூலினி, வராகி, திரிபுர பைரவி, பகுளாமுகி) வராகி ஆலயத்தில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி எனும் வராகி நவராத்திரி வைபவம் இன்று கோலாகலமாக துவங்கியது. இன்று முதல் வருகிற 19.07.2021 தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வராகியை வேண்டி அபிஷேகம், ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, விஷேச அலங்காரம், 108 நெய் தீபம் மற்றும் ஆராதனைகள் பஞ்சமியை முன்னிட்டு நடைபெறுகிறது.

இன்று காலை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது இதில் துர்கா ஹோமம், பாலா ஹோமம், வாசவி ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், அன்னபூரணி ஹோமம், காயத்ரி ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், ஆரோக்கிய லஷ்மி ஹோமம் மற்றும் வராகி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கருணைக்கிழங்கு, வள்ளி கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்களுடன் நாயுருவி, மஞ்சள், குங்குமம், தாமரைப்பூ, தாமரை விதை, நவதானியங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் பஞ்சமுக வராகி தேவிக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சென்னை, கே.கே. நகர், ESI மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சௌமியா சம்பத் மற்றும் டாக்டர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாளை காலை இரண்டாவது நாள் பூஜைகள் காலை 7 மணிக்கு துவங்கப்படுகிறது.

வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று உலகத்தில் எதிரிகள் இல்லை என்பர். பஞ்சமி என்பது வாராஹியை குறிக்கும் பெயர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகத்தால் எனும் ஐந்தொழில்களில் அனுக்ரஹமே வாராஹியின் தொழில். வாராஹியை நினைத்து விரதம் இருந்தால் வளமையும், செழுமையும், வெற்றியும் மற்றும் மகிழ்ச்சியும் நம்மை வந்து சேரும்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி)

இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி)

மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி)

நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி)

ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி)

ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி - சாமுண்டா)

ஏழாம் நாள் சாகம்பரி தேவி

எட்டாம் நாள் வராஹி தேவி

ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி போற்றி பூஜைகள், ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது.

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும்.

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும்.

இந்தியாவில் பஞ்சமுக வராகியாக தன்வந்திரி பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இந்த வராகி அம்மன் என்பவள் அம்பாளின் போர்ப் படை தளபதி ஆவாள். எந்தச் செயல் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவது மிகவும் சிறப்பு என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வெற்றி தெய்வமாகத் திகழும் வராகியை பஞ்சமி நாளில் வழிபட்டு வாழ்க்கையில் பலவிதமான பலன்களை பெற ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தங்களை அன்புடன் அழைக்கிறது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மரகதேஸ்வரருக்கு வலது புறத்தில் தனி ஆலயம் அமைத்து கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த சன்னதியில் என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது. திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமண வரம் உடனே கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. பூமி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இவளிடம் வேண்டிக் கொண்டால் உடனடி நன்மை கிடைக்கிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றன என்கின்றனர் வருகை புரியும் பக்தர்கள்.

வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வாராஹியை வழிபடுகிற அவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. வாராஹி மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படை தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும். இவளுக்கு பல நாமங்கள் உள்ளன. சேனநாதா, தண்டநாதா, வாராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி (வடிவம்), பலி தேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னி, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரியை. இந்த தேவியே பகளாமுகி என்றும் அழைப்பர்.

வாராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வாராஹி, அஷ்வாரூட வாராஹி, ஆதி வாராஹி, லகு வாராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வாராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் என்று பல உடைகள், பல ஆயுதங்கள். வாராஹம் என்றால் என்ன? பன்றி தானே, வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வாராஹி தான். என்ன உதவி தெரியுமா? பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கி நுனியில் (அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி) வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை (இயற்கையை) மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வாராஹி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

வராகி கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும் (ஏர்) மற்றும் தண்டம்? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் (ஆழத்தில்) இருப்பதை எடுப்பதற்கு தானே, கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்) என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை

வராகியை நம்பிக்கையுடன் வழிபடுவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் (வாராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்), எதிரிகள் குறைவார்கள் (அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வாராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது) ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது

வாராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்

இப்படி வாராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் ஒரு விஷயம் வாராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வராகி தேவியை வராகி நவராத்திரியில் வழிபட்டு நன்மை பெற பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்தில் பலவகையான கிழங்குகள், பட்டு புடவைகள், நெய், தேன், பற்படாகம், விலை உயர்ந்த மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளது. ஒன்பது நாட்களும் 9 வகையான அலங்காரம், 9 வகையான நெய்வேத்தியம், 9 வகையான புஷ்பங்கள், 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை, 108 நெய் தீபம், புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

 

Saturday, July 10, 2021

ASHADA NAVARATHRI HOMAM FOR SRI VARAHI AMMAN DAY-01

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரி வைபவம்
1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞனாகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி 10.07.2021, சனிக்கிழமை முதல் 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி அம்மன்  சன்னதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது. 
இதனைத் தொடர்ந்து இன்று 10.07.2021 காலை 10.00 மணிக்கு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு ஹோமம் மற்றும் பூஜைகள் சிறப்புடன் தொடங்கியது.



                                     

மேலும் தொடர்பு கொள்ள முகவரி

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,

இராணிபேட்டை மாவட்டம்,

தொலைபேசி எண் 04172 – 230033 செல் 94433 – 30203.

 

Thursday, July 1, 2021

ASHTAMI HOMAM FOR ASHTA BAIRAVAR ON 02/06/2021

 அஷ்டமியில் அளவில்லா அருளுடன் பொருள் தரும் அஷ்ட பைரவர் யாகம்

                           02.07.2021, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது



இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 02.07.2021 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் (சொர்ணாகர்ஷண பைரவர்) யாகமும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை எட்டு திக்கு காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் மஹா கால பைரவர் யாகம், அஷ்ட மாத்ருகா பூஜையும் நடைபெறுகிறது.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்ட பைரவர்கள்:

ஆனி தேய்பிறை அஷ்டமி: கால பைரவரை வழிபட கண் திருஷ்டி, நோய்கள் நீங்கும் தடைகள் விலகும் மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள். அஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அசிதாங்க பைரவர்:

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்:

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்:

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்:

குரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்:

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வாராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீஷண பைரவர்:

அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்:

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டி தேவி விளங்குகிறாள்.

எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு:

எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

பணம் தரும் பைரவர் - சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு:

ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

தொடர்புக்கு: 9443330203

கயிலை ஞானகுரு டாக்டர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

தன்வந்திரி நகர்,அனந்தலை மதுரா,கீழ்புதுபேட்டை,

வாலாஜாபேட்டை


DRISHTI DURGA/SOOLINI DURGA/JAI DURGA HOMAM ON 02/06/2021

 DRISHTI DURGA/SOOLINI DURGA/JAI DURGA HOMAM                                                                     

      



With the Blessings of our beloved Guruji 'Yagnasri Kayilai Gnanaguru' Dr. Sri Muralidhara Swamigal, Founder, Sri Danvantri Arogya Peedam is organizing for DRISHTI DURGA HOMAM on THEIPIRAI ASTAMI 2nd July 2021, Friday from 10.00 AM Onwards

Goddess Durga helps in clearing all the obstacles in the path of your success, negative forces or drishti are destroyed, any ailments are cured, improvement in your respective fields. Performing this homam helps in getting rid of all the business-related problems and makes the person have a happy and stable life. One shall be blessed with a happy life and Positivity in life.

Drishti Durga Homam will enable one to accomplish high monetary status throughout everyday life and enable one with high confidence. Hopelessness and cash related distresses can be overwhelmed by playing out this homam.

BENEFITS OF DHRISHTI DURGA HOMAM/SOOLINI DURGA/ JAI DURGA HOMAM:

Dhrishti Durga Homam causes you to bring your business, profession, and life up expelling the negative powers in your field. It eases you from obligations and mind hindrance. Drishti Durga Homam will help one attain high financial status in life and empower one with high self-esteem. This homam is performed to get rid of misery and money-related sorrows. It helps ups your business and expert way. It washes away all the effective malice energies and secures one's plant, Industry, Association. It makes peace and benevolent condition in the work environment and pairs your pay. Dhrishti Durga Homam is being led for the advantage of your office and its representatives. It stops misfortunes in business and calling and guarantees peace throughout everyday life and work environment. It evacuates a shortage of cash and guarantees money related strength. The bad effects of curses, evil eyes, doshas, and obstacles are removed from a person’s horoscope by performing this homam with total devotion.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

93 days starting from Wednesday the 24th March 2021 to 24th June 2021 (Daily from 8.30 am to 12.30 pm)