Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 28, 2019

Pathala Homakundam Opening Ceremony ...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்பாதாள ஹோமகுண்டம் திறப்பு விழா.

கலியுகத்தில் இறைவனின் அருளைப்பெற பக்தி சங்கீர்த்தனங்கள், நாமகீர்த்தனங்கள், உருவ வழிபாடுகள், தியான மார்கங்கள், யாக வழிபாடுகள் என பல்வேறு வழிகளில் ஆராதித்து வருகின்றனர். நமது தன்வந்திரி பீடத்தில் கடந்த 16 ஆண்டுகளாக யாகங்களுக்கும், ஹோம பூஜைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவது அனைவரும் அரிந்ததே. ஹோமமே க்ஷேமம், யாகமே யோகம் என்ற தாரக மந்திரத்துடன் உலக நலனுக்காகவும், தொழில், வியாபாரம், உத்யோகம், விவசாயம், திருமணம், குழந்தை பாக்யம், தம்பதிகள் ஒற்றுமை, கடன் பிரச்சனை, திருஷ்டி தோஷங்கள் என பல்வேறு காரணங்களுக்காகவும் பல்லாயிர கணக்கான ஹோமங்கள் நடைபெற்றுள்ள  இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மீண்டும் ஒரு யாகசாலை பாதாளத்தில் எண்கோண வடிவில் பாதாள ஹோமகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 30.12.2019 திங்கள்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

இவ்விழா கோபூஜை, மங்கள இசை, வேதபாராயணங்கள், கணபதி பூஜையுடன் நடைபெற உள்ளது. இதில் திருமதி. மாலதி பிரசன்னா, திருமதி. அனுராதா முரளி பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203




Milagai Nayaki Sakthi Alangaram

Milagai Nayaki Sakthi Alangaram on Sakthi Festival at Walajapet, Sri Danvantri Prathyangira Peedam.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ப்ரத்யங்கிரா பீடத்தில் சக்தி வைபவத்தில் மிளகாய் நாயகி சக்தி வடிவில் அலங்காரம்.



Shani Shanti Pooja at Pathala Swarna Saneeswarar Temple


வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலயத்தில்சனி சாந்தி பூஜை நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 28.12.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு சனி சாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் ஏராளமானவர் பங்கேற்று சனி கிரக ப்ரீதிக்காக பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Wednesday, December 25, 2019

Hanuman Jayanthi Festival...


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 25ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற்றது.தொடர்ந்து  ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் பால்,பன்னீர்,நெல்லிப்பொடி,சந்தனம்,மஞ்சள் போன்ற விசேஷ திரவியங்களை கொண்டு அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.

இதில் அனைவருக்கும் சகல மங்கலங்களும் உண்டாகவும்,நவகிரக தோஷங்கள் விலகவும், நினைத்த காரியம் கைகூடவும், துன்பம் விலகவும், குடும்பத்தில் இன்பம் பெருகவும் கூட்டு பிரார்த்தனை நடைப்பெற்றது தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டதுஇதில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அணையர் டாக்டர்.நந்தகோபால் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷித் துணைத்தலைவர் திரு.துளசிராம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த தகவலை ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203






Thursday, December 19, 2019

Dasa Bhairavar Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுதச பைரவர் யாகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று 19.12.2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை தச பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர் மற்றும் சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓம்சக்தி பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இப்பூஜைக்கு திருவலம் திரு.சத்யா குடும்பத்தினர்கள் கைங்கர்யம் செய்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Sri Ayyappa Dharma Prachara Ratha Yatra ....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ ஐயப்பதர்ம பிரச்சார ரதத்திற்கு சிறப்பு பூஜை.

இராணிப்பேட்டை மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ஸ்ரீ ஐயப்பதர்ம பிரச்சார ரத யாத்திரை இன்று 19.12.2019 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் வருகை புரிந்தது. ஸ்ரீ ஐயப்பனுக்கு பூர்ணகும்பத்துடன் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனுக்குரிய நீராஞ்சன தீபம் ஏற்றபட்டது. இதில் திருப்பத்துர் மாவட்ட நீதிபதி திருமதி. இந்திராணி, ரத ஒருங்கிணைப்பாளர் திரு. துரை சங்கர், வாலாஜாபேட்டை வட்டாச்சியர் திரு. பாலாஜி, வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் திரு. S.பாலு, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோவில் திரு. ஜெயச்சந்திரன், திரு. ஓம்சக்தி சுதாகர், திரு. K.கண்ணன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும், ஓம்சக்தி பக்தர்களும், ஐயப்ப பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Sunday, December 15, 2019

16th Year Sahasra Kalasabhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஸஹஸ்ர (1008) கலசாபிஷேகம் – ஸஹஸ்ர நாம அர்ச்சனைநடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு 16 ஆம் ஆண்டு ஸஹஸ்ர (1008) கலசாபிஷேகத்துடன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

இதில் கோ பூஜை, மங்கள இசை, வேதபாராயணம், மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புனித தீர்த்தங்களுடன் 1008 கலசங்கள் அமைக்கப்பட்டு, அக்கலசங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்று 1008 பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, பால், மஞ்சள், சந்தனம், நெல்லிப்பொடி, பன்னீர் போன்ற திரவியங்களால் உலக மக்களின் உடல் பிணி உள்ளது பிணி நீங்க ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் திருமஞ்சனம் நடைபெற்று ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.