தன்வந்திரி பீடத்தில்
சுயம்வரகலா பார்வதி ஹோமம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 29.10.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00
மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை
கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த
ஹோமத்தில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர ஹோமம்
ராகு கேது ஹோமம், சுயம்வரகலா
பார்வதி ஹோமம்
நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும்
சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற நல்ல கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும்,
ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை நடைபெற்று பங்கேற்ற பெண்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment