Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 27, 2017

கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்.

தன்வந்திரி பீடத்தில்
கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்.
நாம் நம் வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவுகள் செய்து வரும்பொழுதும் தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதாலும், வருமானத்திற்கு வழிவகை இல்லாததாலும், ஜாதக ரீதியாக பூர்வ புண்ய பலன் சரியாக அமையாததாலும் நமக்கு கடன் சுமை உருவாகிறது. அதனால் மன நோய்க்கும் உடல் நோய்க்கும் ஆளாகிறோம்.

மேலும் கடனில் தேவை, தேவையற்றது என  இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை திருமணம், வீடு, மனை வாங்குதல், நல்ல தொழில் அமைத்தல், குழந்தைகளின் கல்வி போன்ற நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுப கடன் என்றும் , விபத்து, நோய்கள் , ஆடம்பர மோகம், தேவையற்ற பழக்க வழக்கங்கள் போன்றவைகளுக்காக வாங்கும் கடன்கள் அசுப கடன் எனலாம்.

கடன் வாங்கும் பழக்கம் என்பது போதைக்கு அடிமையாவது எனலாம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினானே இலங்கை வேந்தன் என்பது ஆன்றோர் வாக்கு. கடன் ஒருவனை தேவையற்றவைகளில் சிக்கவைத்து ஆரோக்யத்தையும் குடும்ப சந்தோஷத்தையும் அழித்துவிடும். எனவே, கடனே இல்லாமல் வாழக்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் இன்றைக்கு சிறப்பானது.

அதிகப்படியான கடன் பெற்றவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், மஹா லக்ஷ்மி, ஸ்ரீ உமா மஹேஸ்வரர் போன்ற தெய்வங்களை உரிய நாட்களில் முறையாக வழிபாடு செய்தால் ருணம் எனும் கடன் நிவர்த்திக்கு வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கடனுக்கான காரணம் தீய பழக்க வழக்கங்கள், ஜாதகர்களுக்கு நடைபெறும் தசாபுக்திகள், பித்ரு தோஷங்கள், தெய்வ குற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு எனலாம். இவற்றை மனதில்கொண்டு மக்கள் கடன் எனும் இருளில் இருந்து நீங்கி ஆரோக்யத்துடன் சகல ஐஸ்வர்யமும் பெறவும், சௌபாக்யங்கள் கிடைக்கவும், சாபங்கள் அகலவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 24.11.2017 வெள்ளிக் கிழமை திருவோணம் நட்சத்திரம், வாஸ்து நாள், ஷஷ்டி விரதம் கூடிய நாளில் காலை 10.00 மணியளவில் மன நோய், உடல் நோய் நீங்க ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், கடன் பிணி நீங்கும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


No comments:

Post a Comment