தன்வந்திரி பீடத்தில்
தீபாவளியை
முன்னிட்டு
குபேர லக்ஷ்மி யாகத்துடன்
ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.
செல்வம் தரும் லட்சுமி குபேர வழிபாடு
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில்
வளத்தையும், செல்வத்தையும் பெற
வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும்
ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.
‘லட்சுமி குபேரன்’
திருப்பதி
ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன்
என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை
கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி,
சங்கநிதி, பத்ம நிதியை காக்கும்
பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.திருப்பதி
ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன்
என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை
கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி,
சங்கநிதி, பத்ம நிதியை காக்கும்
பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால்
‘வாழப் பிறந்தவனுக்கு வடக்கு’ என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித்
தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள்
மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க
அவர் பணித்தார். எனவே தான் குபேரன்
‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.
தீபாவளி
அன்று இரவில் குபேரனை விசேஷமாக,
தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து
வழிபடும் பழக்கம் உள்ளது.
‘ஓம் ய க்ஷய குபேராய வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா’
என்ற
குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.
லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும்.
வீட்டில் அமைதி நிலவும். செல்வம்
நிலைக்கும். என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் தீராத
நோய்கள் பசிப்பிணி அகலவும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறவும். காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப்
பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி,
தெய்வீக அருள் கிடைக்கவும், கல்வியும்
செல்வமும் பெற்று வாழ்க்கையில் சௌபாக்கியங்களுடன் ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழவும்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன்
கிழமை மாலை 4.30 மணிக்கு
உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு
மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும்,
செல்வத்தையும் பெற
வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும்
ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற
அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment