Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 30, 2017

Sunday, October 29, 2017

சுயம்வரகலா பார்வதி ஹோமம்..........

தன்வந்திரி பீடத்தில்
சுயம்வரகலா பார்வதி ஹோமம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 29.10.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர ஹோமம் ராகு கேது  ஹோமம், சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.


ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற நல்ல கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை நடைபெற்று பங்கேற்பெண்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Special Homams and Poojas at Sri Danvantri Peedam, Walajapet

Special Homams and Poojas at Sri Danvantri 

Peedam, Walajapet. Thanks to " 

DINAMALAR, MAALAI SUDAR, MAALAI 

MALAR, SAKSHI, ANDHRA JYOTHI " 

Daily News Papers...







Saturday, October 28, 2017

சனி தோஷ நிவர்த்தி யாகம்...........

தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி பூஜையுடன்
சனி தோஷ  நிவர்த்தி யாகம்.

வேலுர் மாவட்டம், வாலாஜாபேட்டை  அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பக்தர்கள் ஆரோக்கியத்திற்காகவும், சனி பகவானின் உக்கிரம் தணியவும், உலக மக்களின் நலன் வேண்டியும், வருகிற 04.11.2017 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் ஏழரை சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்களும், தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டவர்களும், வழக்கு வியாஜ்யங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது.
யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள்………….
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் சேர்க்கப்படவுள்ளன.
காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம்………..
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்.

Thanks to " BALAJOTHIDAM " 03.11.2017 vol:33 issue:45


வாஸ்து ஹோமம்...........

தன்வந்திரி பீடத்தில்
வளமான வாழ்வு வேண்டி
வாஸ்து ஹோமம்.
ஆண்டின் எல்லா நாட்களும் உறங்கியபடி இருக்கும் இந்த வாஸ்து பகவான், வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே விழித்து இருந்து வாஸ்து நாளில் அருளாசி செய்வார்.

வருடத்திற்கு எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள்......
சித்திரை 10-ம் தேதி, வைகாசி 21-ம் தேதி, ஆடி 11-ம் தேதி, ஆவணி 6-ம் தேதி, ஐப்பசி 11-ம் தேதி, கார்த்திகை 8-ம் தேதி, தை 12-ம் தேதி, மாசி 22-ம் தேதி ஆகிய இந்த எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படும் எந்த கட்டிட வேலைகளும் சிறப்பாக அமையும் என்பது பொதுவான  நம்பிக்கையாகும்.

தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து ஹோமம்.....
இன்று (28-10-17) வாஸ்து நாளாகும் . இநாளில் வாஸ்து பூஜைகள் செய்தால் நன்மை ஏற்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே இன்று வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவானை மகிழ்விக்கும் விதமாகவும் வளமான வாழ்வு வேண்டியும் ஸ்ரீ வாஸ்து ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவனுக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்றது.

வாஸ்து ஹோமத்தில் பிரார்த்தனை.......

இதில் புதிய அல்லது மறு சீரமைப்பு கட்டிட வேலைகளை தொடங்குவதுக்கும் நாம் வாழும் இடம் வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரத்துடன்  நல்ல காற்றும் வெளிச்சமும் சுற்று பொருள் சூழ்நிலையுடன் நல்ல இடமாக அமைந்து மக்கள் செல்வத்துடன் ஐஸ்வர்யம், ஆரோக்யம், ஆனந்ததுடன் சிறப்பாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.சூரியனை அடிப்படையாக கொண்ட இந்த வாஸ்து சாஸ்திரத்தின் நாயகன் வாஸ்து பகவான் வாஸ்து பகவானும் பஞ்ச பூதங்களும் ஒருங்கிணைந்து ஒரு நிலத்தை வளமிக்கதாக மாற்றி அங்கு வாழும் உயிர்களை ஆசிர்வதிப்பதாக் சொல்லபடுகிறது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Friday, October 27, 2017

2018 தமிழ் தினசரி காலண்டர் வெளியீட்டு விழா

2018 தமிழ் தினசரி காலண்டர் வெளியீட்டு விழா


வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று மாலை 2018 தமிழ் தினசரி காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வெளியிட சென்னை A.R.C சர்வதேச கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சிமைய ஸ்தாபகர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் லக்ஷ்மணன் அவர்கள் பெற்றுகொண்டார். திருமதி நிர்மலா முரளிதரன் உடனிருந்து சிறப்பித்தார்.



அகில உலக புரோகிதர் நல ஹோமம்

நவம்பர் 16ல் தன்வந்திரி பீடத்தில்
அகில உலக  புரோகிதர்கள் நலன் கருதி
சிறப்பு ஹோமம்.

அகில உலக  புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலன் கருதி 8 ஆம் ஆண்டு சிறப்பு  தன்வந்திரி யக்ஞம் வருகிற 16.11.2017 வியாழக்கிழமை காலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  கயிலை ஞானகுரு டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் கீழ்கண்ட நிகழ்ச்சி நிழல் படி நடைபெறுகிறது.
ஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்கள் குடும்பத்தில் வரப்போகும் சுப/அசுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குண்டான பரிகாரங்களைச் சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டு பண்ணுவதே புரோகிதர்களின் பணியாகும். ராஜாக்கள், மந்திரிகளைவிட புரோகிதர்களை நன்கு மதித்து கௌரவிக்க வேண்டியது ஓவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.

நேரம், காலம்  என்று பார்க்காமல்  தங்கள் குடும்பம், குழந்தை என்று பார்க்காமல் அவர்கள் குடும்பத்தில் நடைபெறும்  நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற முறையில் ஜாதி, இன, மொழி பேதமின்றி மற்றவர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப/ அசுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று புரோகிதப்பணி செய்து வருகிறார்கள். இப்படிப் பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள், பலவிதமான தடைகள், மனச்சஞ்சலங்கள், கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனைகள், மன உபாதைகள், மனப் போராட்டங்கள் நிகழ்கின்றன. இத்தகைய கஷ்டங்களை மனதில் கொண்டு பிரதி வருடமும் நவம்பர் மாதம் 16ம் தேதி வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் அகில உலக புரோகிதர்கள் மற்றும் ஆவர்கள் குடும்பங்களின் நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யக்ஞம் நடைபெறுகிறது.

புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக இந்தாண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 16.11.2017 வியாழக் கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜை மற்றும் யக்ஞங்கள், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெறுகிறது. அவ்வமையம் உலக புரோகிதர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் அழைப்பது,
தென்னிந்திய புரோகிதர்கள் சங்கம் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர்.
நிகழ்ச்சி நிரல்
16.11.2017 வியாழக் கிழமை
காலை 6.00 மணி     ..    மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம்,
                          விக்னேஸ்வர பூஜை,
                          கணபதி யக்ஞம்,
                          நவக்ரஹ யக்ஞம்,
                          ஸ்ரீமந் நாராயண யக்ஞம்,
                          (ஜனார்தன யக்ஞம்),
                          ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம்
          8.30 மணி  ..    பூர்ணாஹூதி
          9.00 மணி  ..    பிரசாத விநியோகம்
          10.00 மணி ..    நாதஸ்வர இசையுடன்
                          புரோகிதர்கள் ஊர்வலம், பக்தி பஜன்
          10.30 மணி ..    மகா சமஷ்டி சங்கல்பம்
          10.45 மணி ..    சகல நோய் தீர்க்கும்
                           மஹா தன்வந்திரி யக்ஞம், துவக்கம்
          11.15 மணி ..    ரக்ஷாபந்தனம்
          11.30 மணி ..    கூட்டுப் பிரார்த்தனை
          11.45 மணி ..    மஹா பூர்ணாஹூதி
          1.00  மணி ..    ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளுரை
          1.30  மணி ..    நிர்வாகிகள் நன்றியுரை
          2.00  மணி ..    பிரசாத விநியோகம்
          2.30  மணி ..    நிர்வாகிகளை கௌரவித்தல்
குறிப்பு: யக்ஞத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அவரவர் ஸம்பிரதாயப்படி (வைதீக முறையில்) வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். செல்போன், புகைப்படம், விடியோ கருவிகள் யக்ஞத்தின் போது பயன்படுத்த வேண்டாம். யக்ஞம் மற்றும் பூஜை, அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆண்கள் வரை சட்டை, பனியன் அணிய அனுமதி இல்லை.
பஸ் மார்க்கம் : சென்னை  to  வேலூர்
வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சோளிங்கர் சாலையில் 3 கி.மீ தூரத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது.
ரயில் மார்க்கம் : சென்னை to காட்பாடி மார்க்கத்தில் வாலாஜா ரோடு சந்திப்பில் அல்லது காட்பாடி சந்திப்பில் இறங்கி, வாலாஜாபேட்டை – சோளிங்கர் சாலையில் 3 கி.மீ தூரத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203




கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்.

தன்வந்திரி பீடத்தில்
கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்.
நாம் நம் வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவுகள் செய்து வரும்பொழுதும் தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதாலும், வருமானத்திற்கு வழிவகை இல்லாததாலும், ஜாதக ரீதியாக பூர்வ புண்ய பலன் சரியாக அமையாததாலும் நமக்கு கடன் சுமை உருவாகிறது. அதனால் மன நோய்க்கும் உடல் நோய்க்கும் ஆளாகிறோம்.

மேலும் கடனில் தேவை, தேவையற்றது என  இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை திருமணம், வீடு, மனை வாங்குதல், நல்ல தொழில் அமைத்தல், குழந்தைகளின் கல்வி போன்ற நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுப கடன் என்றும் , விபத்து, நோய்கள் , ஆடம்பர மோகம், தேவையற்ற பழக்க வழக்கங்கள் போன்றவைகளுக்காக வாங்கும் கடன்கள் அசுப கடன் எனலாம்.

கடன் வாங்கும் பழக்கம் என்பது போதைக்கு அடிமையாவது எனலாம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினானே இலங்கை வேந்தன் என்பது ஆன்றோர் வாக்கு. கடன் ஒருவனை தேவையற்றவைகளில் சிக்கவைத்து ஆரோக்யத்தையும் குடும்ப சந்தோஷத்தையும் அழித்துவிடும். எனவே, கடனே இல்லாமல் வாழக்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் இன்றைக்கு சிறப்பானது.

அதிகப்படியான கடன் பெற்றவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், மஹா லக்ஷ்மி, ஸ்ரீ உமா மஹேஸ்வரர் போன்ற தெய்வங்களை உரிய நாட்களில் முறையாக வழிபாடு செய்தால் ருணம் எனும் கடன் நிவர்த்திக்கு வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கடனுக்கான காரணம் தீய பழக்க வழக்கங்கள், ஜாதகர்களுக்கு நடைபெறும் தசாபுக்திகள், பித்ரு தோஷங்கள், தெய்வ குற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு எனலாம். இவற்றை மனதில்கொண்டு மக்கள் கடன் எனும் இருளில் இருந்து நீங்கி ஆரோக்யத்துடன் சகல ஐஸ்வர்யமும் பெறவும், சௌபாக்யங்கள் கிடைக்கவும், சாபங்கள் அகலவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 24.11.2017 வெள்ளிக் கிழமை திருவோணம் நட்சத்திரம், வாஸ்து நாள், ஷஷ்டி விரதம் கூடிய நாளில் காலை 10.00 மணியளவில் மன நோய், உடல் நோய் நீங்க ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், கடன் பிணி நீங்கும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Thursday, October 26, 2017

சுயம்வரகலா பார்வதி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
சுயம்வரகலா பார்வதி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் வருகிற 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது திருமணம் ஆகும். அந்த திருமண நிகழ்வு பல தோஷங்களால் தடைபட்டு திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் ஆவதற்கு வழிவகை செய்யும் சுயம்வரகலா பார்வதி ஹோமம் ஆகும்.

இந்த பார்வதி ஹோமம் என்பது பார்வதி தேவிக்காக செய்யப்படுவதாகும். அவ்வாறு செய்யப்படும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரம் தேவி பார்வதி அவர்களே சிவபெருமானை போற்றிச் செய்தது என்றும், அந்த ஹோமத்தை செய்ததின் விளைவாக தேவி பார்வதி சிவபெருமானை மணந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே திருமணங்கள் ஆகாதவர்கள் அவர்களது திருமணத் தடங்கல்களை முழுமையாக நீக்கி அவர்களுக்கு நல்ல முறையில் உடனே திருமணம் நடப்பதற்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் திருமணம் உடனே நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். சர்பதோஷம், ராகுதோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிர தோஷங்கள் நீங்கி பெற்றோரின் ஆசிகளுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவியும், மனைவிக்கு ஏற்ற கணவரும் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513, வேலூர் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா.
அலைபேசி : 09443330203
e-Mail : danvantripeedam@gmail.com