தன்வந்திரி பீடத்தில்
07.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு
வைகாசி விசாகத்தை முன்னிட்டு
ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார
ஹோமம்,
கார்த்திகை குமரனுக்கு சிறப்பு
அபிஷேகம்
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி வருகிற
07.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வைகாசி விசாகத்தை
முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமமும் தன்வந்திரி
பீடத்தில் கார்த்திகைப் பெண்களுடன் உள்ள கார்த்திகை குமரனுக்கு
சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது
மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ
ஒரு உருவில் உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு
கீழே இறங்கி வருதல் என்று பொருள்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள்
அவதாரம் செய்த நாளாகும். இந்த
நாளில் நடைபெறவுள்ள ஹோமத்திலும் அபிஷேகத்திலும்
பங்கேற்று முருகனை வணங்கினால் சத்ருதொல்லை நீங்கும், பகை விலகும். துன்பம் நீங்கும்.கல்வி, ஞானம் தரும் துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். திருமண பேறு
கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும். நோய்கள்
நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்
உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி,
தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை
காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள்
தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார்..
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் ‘குகன்’ ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் ‘சரவணபவன்’ என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ‘ஆறுமுகன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
முருகப்பெருமான் பாலபருவத்தில் லீலைகள்
பல செய்தார். பிரம்மாவுக்கு ‘ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார்.
தந்தைக்கு பாடம் சொல்லி ‘தகப்பன் சாமி’ என்ற பெயரை பெற்றார்.தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.
No comments:
Post a Comment