வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
வருகிற 09.07.2017 முதல்
குரு பூர்ணிமா முதல் கோடி தீபம்
கோடி அர்ச்சனை ஆரம்பம்
“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;
பூஜிக்கத் தகுந்தது குருவின்
திருப்பாதங்கள்;
மந்திரத்திற்கு உகந்தது குருவின்
வாக்கியங்கள்;
குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களின் மகிமையை
அறிந்து கொள்ளும் விதத்திலும் சீடர்கள் தன்னுடைய குருவை போற்றும் விதத்திலும்
வியாச பூர்ணிமா என்றழைக்கப்படும் குரு பூர்ணிமா நாளான 09.07.2017 ஞாயிற்று கிழமை முதல் கோடி தீபம், கோடி அர்ச்சனை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆசிகளுடன் துவங்க உள்ளது.
குரு பூர்ணிமாவின் மகிமை.
பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு
(ஆத்ம) தன்மையை உணர ஒவ்வோரு உயிகளுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு
பூர்ணிமா ". குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து
இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள் ஆகும். குருவின் பேராற்றல் எல்லா நாளும்
இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனது
குருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் துவக்க நாளாகக்
கொண்டாடப்படுகிறது. குருபூர்ணிமா நாளன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில்
ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம்
கூறுகிறது,
குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல ,
பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது
தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில்
உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில்
குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள்
என்பதே உண்மை.
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது
சுவாசம், பிதா என்பது பிங்கலை என்னும் வலது
சுவாசம். குரு என்பது சுழுமுனை சுவாசம்
இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே
சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம். சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக
நடைபெறும் ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா.
இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிகொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத்
தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான
ஒரு நாளாகக் கொண்டாடப் படுகிறது.
உலகத்தில் உள்ள அனைவருக்கும்
செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?......
.
குருவால் மட்டும்தான் முடியும். குரு
வெளியில் உலகத்தினருக்குப் பிசைக்காரனாகத் தெரியலாம். அதனால் தானோ என்னவோ யோகிராம்
போன்ற மகான்கள் தன்னைப் பிச்சைக்காரன் என்றே பிரகடனப்படுத்திக்கொண்டார்கள். ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத ஞானப் பொக்கிஷம்.
எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும்
கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும்
குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு. தனது அக வாழ்விற்கு வழிகாட்டித்
தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே
குருபூர்ணிமா.
ஆடி மாதப் பௌர்ணமியை "ஆஷாட சுத்த
பௌர்ணமி' என்பர். இந்நாளில் துறவிகள்
சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள் வார்கள். அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.
குரு பூர்ணிமா என்று சொல்லப்படும்
வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு
ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வியாச பௌர்ணமி
நாளில் தன்வந்திரி பீடத்தில் துவங்க உள்ள கோடி தீபம், கோடி அர்ச்சனை மற்றும் ஹோமத்திலும்
பூஜையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு குரு
அருள் பெறும்படி வேண்டுகிறோம்..
No comments:
Post a Comment