Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 11, 2017

தன்வந்திரி பீடத்தில் 116 கலசங்கள் கொண்டு ஸ்ரீ ஸத்ய நாராயணருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இரண்டு நாட்கள், 1116 கலசங்கள் கொண்டு
ஸ்ரீ ஸத்ய நாராயணர் ஹோமம் நடைபெற்று 1000 கலசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. 116 கலசங்கள் கொண்டு ஸ்ரீ ஸத்ய நாராயணருக்குமஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 27 நட்சத்திரங்களுக்கும் 9 நவகிரகங்களுக்கும் தனித்தனியே ஹோம குண்டம் அமைத்து நட்சத்திர நவக்கிரக ஹோமங்கள் மற்றும் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமம் ஸ்ரீ ருத்ர ஹோமம் , புருஷசூக்த ஹோமம் நடைபெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெற்றோர்களுக்கு 21ம் ஆண்டு மகேஸ்வர பூஜையுடன் சிறப்பு அன்னதானம் நடைபெற்று சாதுக்களுக்கு வஸ்த்திர தானம் வழங்கப்பட்டது.நிறைவாக தன்வந்திரிபீடத்திலுள்ள அனைத்து பரிவார மூர்த்திகள் மற்றும் 468 சித்தர்களுக்கும் இரவு 12.00 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் செய்து இறை பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. S.A. ராமன், டாக்டர் .தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நீதியரசர். மாண்புமிகு  P. ஜோதிமணி, நீதிபதிதிரு.வணங்காமுடி ,திருமதி.டீக்காராமன்நீதிபதி, K.ராதாகிருஷ்ணன்.I.P.S.D.G.P.சென்னை, திரு.Nஅறிவுச்செல்வம்I.P.S,
திரு.R.சுடலைக்கண்ணன்.I.A.S.திரு.J.L,ஈஸ்வரப்பன்,ஆற்காடுசட்டமன்ற உறுப்பினர்,திருR.காந்தி இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்,
ஆற்காடு தொழிலதிபர் J. லஷ்மணன், ஆகியோர் திரு.M.  வெங்கடசுப்பு தொழிலதிபர் டார்லிங் குருப். பி.ஆர்.சி.லெதர்ஸ் திரு.ரமேஷ் இராணிப்பேட்டை கு.சரவணன்,எஸ்.டி.சேகர், எஸ்.டி.எஸ். மஹால், வன்னிவேடு சி.சக்தவேலு குமார்,சோளிங்கர் ஏ.எல்.சாமி, திரு. சுமைதாங்கி C. ஏழுமலை,W.S. வேதகிரி,W.G. மோகன்,W.G.முரளி, M.G.K.தனஞ்செழியன், இந்துமுன்னணி, டி.வி.ராஜேஸ், திரு.ஆர்.வரதராஜன் மேலாண்மை இயக்குனர் ரெப்கோ வங்கி சென்னை திரு. K. மணிவண்ணன் D.R.O.  மேலாண்மை. இயக்குனர் அம்முண்டி சர்க்கரை ஆலை, திருமதி.சாம்ராஜ்யலஷ்மி ,திருமதி.ஸ்ரீமதிஅன்னபாபா. மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக வருகைபுரிந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜித்த கலசங்களை இலவசமாக  ஸ்வாமிகள் ஆசிகளுடன் வழங்கினர்.  நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக இரவு 9.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் புதியதாக அமைத்துள்ள வழித்தடத்திற்கு திரு.டாக்டர்.கே.ராதாகிருஷ்ணன்.I.P.S. D.G.P.  சிவில் சப்ளை சென்னை அவர்களால் ஆரோக்ய பாதை( AROGYA MARG)  என்ற பெயரில் கல்வேட்டு திறக்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.




















No comments:

Post a Comment