தன்வந்திரி பீடத்தில்
சித்ரா பௌர்ணமியை
முன்னிட்டு
1116 கலசங்கள் கொண்டு
ஸ்ரீ ஸத்ய நாராயண
பூஜை துவங்கியது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி தன்வந்திரி
பீடத்தில்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று செவ்வாய்
கிழமை
காலை 09.05.2017 காலை 6.00 – 6.30 மணிக்கு மங்கள இசையுடன் கோபூஜை,
தேவதாஅநுக்ஞை 6.35 முதல் 7.15 முனீஸ்வரன் மற்றும் நவகன்னிகைகளுக்கு
பொங்கல் இட்டு வழிபாடு நடைபெற்றது.தொடர்ந்து 7.30
மணிக்கு மஹா கணபதிக்கு மஹா அபிஷேகத்துடன், மூலவர்
தன்வந்திரி ஆரோக்ய லஷ்மி ஸ்ரீ சத்ய நாராயணர்,ஸ்ரீ கூர்ம லஷ்மி
நரசிம்மர் போன்ற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது.மேலும் காலை 8.00 மணிக்கு, ஸ்ரீ கணபதி, லஷ்மி நவக்கிரக சாந்தி மற்றும் வாஸ்து சாந்தி
ஹோமத்துடன் சகல தேவதா ஹோமம்,ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று நண்பகல் 12.00
மணிக்கு மஹா பூர்ணாஹீதி தீபாரதனையுடன் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை
5.00 மணிக்கு
யாகசாலை நிர்மாணம், 1116 கலசங்கள் ஸ்தாபனம் செய்து ஸ்ரீ
ஸத்ய நாராயணர்,ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், யாக சாலையில் புஷ்பத்தால்அலங்கரிக்கப்பட்டு கலச பூஜைகள் மற்றும் ஹோமம் நடைபெற்று
இரவு
8.00 மணிக்கு மஹா பூர்ணாஹீதி, மஹா தீபாரதனை அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேற்காணும்
வைபவத்தை முன்னிட்டு நேற்று 8.05.2017 திங்கட் கிழமை
மாலை 5.00 மணிக்கு
வாலாஜாபேட்டை ஸ்ரீ வேதாந்த தேசிகர் வேதபாராயண குழுவினர் வழங்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர
நாம பாராயணத்துடன் ஸ்ரீ லஷ்மி நாராயண ஹோமம் நடைபெற்றது.
இன்று
மாலை 5.00 மணிக்கு
தர்மபுரி இசையரசு திரு R.வெங்கடாஜலபதி குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை கோட்டாச்சியர் திருமதி.இராஜலஷ்மி இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.காந்தி,வேலூர்
முன்னாள் மேயர்.திரு.கார்த்திகேயன் இராணிப்பேட்டை கோட்டாச்சியர் திருமதி.இராஜலஷ்மி,
திரு வேலு, முன்னாள் M.P, சோளிங்கர்
திரு.உதயசங்கர்,துர்காபவன்,உரிமையாளர்,வேலூர்ஆற்காடுதிரு.சரவணன், திரு.ராஜா, திருப்பாற்கடல் திரு.சுந்தரம்,,வாலாஜாபேட்டை
விஜயலஷ்மி பேக்கரி உரிமையாளர், டாக்டர் தொப்ப கவுண்டர்,
சுகாதார துறை அலுவலர். திரு. இராஜசேகர், தொழில் அதிபர்கள் பெங்களூர் திரு.ஸ்ரீநிவாசன், திரு.சங்கமேஸ்வரன்,திரு.கௌசிக்,திரு.ரகுபதி,
இராணிப்பேட்டை P.R.C.leathers திரு.ரமேஸ்,திரு.A.L.சாமி,சென்னை ராமச்சந்திரன்,சென்னை
கயிலை தங்கராஜ்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment