Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, December 7, 2016

தன்வந்திரி பீடத்தில் மோட்ச தீபம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று  07.12.2016 காலை 10.00 மணியளவில் தன்வந்திரி குடும்பத்தினர்கள் சேவார்த்திகள் ஊழியர்கள், வருகைபுரிந்த பக்தர்கள் அனைவரும் சேர்ந்து மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இதனை தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளரும் நாடக நடிகரும் திரைப்பட நடிகரும் அரசியல் ஆலோசகருமான திரு.சோ இராமசாமி அவர்களுடைய ஆன்மா சாந்திபெற மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இந் நிகழ்ச்சியில் ஸ்வாமிகள் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மறைவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தி அன்பிற்க்கும் பெருமதிப்பிற்க்கும் உரிய முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இனி நம்முடன் இல்லை என்பதைவிட நம் இதயத்தில் என்றும் வாழ்வார் என்பது நிச்சயம் எனலாம்.தமிழகமட்டுமின்றி இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் மகத்தான ஓப்புயர்வற்ற ஒரு தலைவியாக போற்றப்பட்டார்..இவர் ஏழை மக்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு செய்த உதவிகள் அனைவருக்கும் பிரம்மிக்கவைத்தது. இத்தகைய பாசமிகு தேச தலைவி நம்மைவிட்டு சென்றது மிகவும் வேதனையானது.அவரை பிரிந்து வாழும் அனைவருக்கும் இரங்கல் செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.









No comments:

Post a Comment