வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில்
அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13 ம் ஆண்டு நடைபெற உள்ளது, இந்த வைபவம்
நவம்பர் 28 வெள்ளிக் கிழமை முதல் டிசம்பர் 14 ம் தேதி ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6,00 மணி வரை நடைபெற உள்ளது.
தன்வந்திரி பகவான் யார்
தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின்
அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி
உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
108 மூலிகை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதால் நோய்
உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள்
மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழறை
சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும்
வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய
சம்மந்தமான குறைகள் நீங்குவதற்கு வழி வகை செய்யும். வருடாந்திர தைலாபிஷேகம்
பூர்த்தியுடன் டிசம்பர் 14ம் தேதி 108 சுமங்கலி பூஜையும், டிசம்பர் 15 ம் தேதி 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகம் செய்து,
சிறப்பு நோய் நிவாரண ஹோமத்துடன்விசேஷ
வழிபாடுகள் செய்து இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று பயன்
பெற பிராத்திக்கின்றோம். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment